உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

66

அடியடி தோறும் ஐஞ்சீராகி

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக்

கடையொரு சீரும் விளங்கா யாகி

நேர்பதினாறே நிரைபதினேழென்

றோதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே”

1

265

என்பதனால் அறியப்படும். இவ்விலக்கணத்தோடு ஒத்து வருந்தேவாரச் செய்யுட்கள் வருமாறு:-

"நெருப்புறு வெள்விடை மேனியர்

ஏறுவர் நெற்றியின்கண்,

மருப்புறு வன்கண்ணீர் தாதையைக்

காட்டுவர் மாமுருகன் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை

யார்விறன் மாதவர்வாழ்

பொருப்புறு மாளிகைத் தென்புற

வத்தணி புண்ணியரே,’

"குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற்

குமிண்சிரிப்பும்,

பனித்த சடையும் பவளம்போன் மேனியிற்

பால்வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங்

காணப் பெற்றால்,

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே,

“ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக்

கூனமில்லைக்

கன்றிய காலனைக் காலாற் கடிந்தான்

அடியவர்க்காய்ச்,

சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்

பலத்துநட்டம்,

என்றுவந் தாயென்னும் எம்பெரு மான்றன்

றிருக்குறிப்பே.’

(சம்பந்தர் - பிரமபுரம்)

(அப்பர் - கோயில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/298&oldid=1587806" இலிருந்து மீள்விக்கப்பட்டது