உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

266

மறைமலையம் 22

ம்மூன்று தேவாரச் செய்யுட்களில் முதலிரண்டும் நிரையசையால் தொடங்கியிருத்தலின் அடிகடோறும் ஒற்றுத் தள்ளிப் பதினேழுெத்துக்களும், மூன்றாஞ் செய்யுள் நேரசை யால் தொடங்கியிருத்தலின் அடிகடோறும் ஒற்றுத் தள்ளிப் பதினாறெழுத்துக்களும் உடையவாய், இயற்சீர் இயற்சீர் வெண் டளையும் வெண்சீர் வெண்டளையும் பிழையாமல் வந்து தூய கட்டளைக் கலித்துறைகளாயிருந்தல் காண்க. இவ்வாறு கட்டளைக் கலித்துறை யிலக்கணம் வழுவாமல் வருஞ் செய்யுட்கள் தேவாரத்தின்கண் எவ்வளவோ உள்ளன! அற்றேல், இவை 'திருவிருத்தம்' என்னும் பெயராற் குறிக்கப் பட்டிருத்தல் என்னையெனிற், கட்டளைக் கலித்துறையினின்றே விருத்தப் பாக்கள் பிறந்தனவென்று மேலே யாங் கூறியதற்குச் சான்றாக, அக் காலத்திற் கட்டளைக்கலித்துறைகளும் விருத்தமென வழங்கினவேயன்றிக்; கட்டளைக் கலித்துறை லக்கணத்திற் பிறழா இவை ஏனை விருத்தப்பாக்களின் வேறாமென்றே துணிக. ங்ஙனமாகத் தேவாரத்துட் கட்டளைக் கலித்துறைப் பாவால் வந்த செய்யுட்கள் மிகமலிந்து கிடப்பவும், அவை தம்மை ஆராய்ந்துணர மாட்டாதார் தாமும் 'தமிழ் வரலாறு' எழுதப் புகுதல் நகையாடற் பாலதேயாம் என்க. தேவாரத்துள் துறையில்லையெனக் கூறவந்தார் கோள் புரைபடுதலின் அதுகொண்டு மாணிக்கவாசகப் பெருமான், ஏனை மூவர்க்கும் பின் என்னும் அவரது கோளும் புரையாதல்

காண்க.

இனித்; 'திருவாசகத்' தின்கட் காணப்படும் திருவம் மானை திருவுந்தியார்; திருப்பொன்னூசல், திருச்சாழல் போல்வன வெல்லாம் பண்டைக் காலத்தன வல்லவென்றும், இவை பிற்காலத்துப் பெருகினவேயா மென்றுங் கொள்ளல் வேண்டும் எனக் கூறிய எதிர்ப்பக்கத்தவர் தம் கூற்றுக்குச் சான்று ஏதுங் காட்டாமையின் அஃது ஒரு பொருட்டாகக் கருதற்பாலதன் றென்றும், அவர் பண்டை நூற்பயிற்சி யில்லாமையின் இங்ஙனம் உரை நிகழ்த்தினா ரென்பது ஈண்டுக் காட்டற்பாற்று. 'திருவம்மானை,’ ‘திருவுந்தியார்' முதலாயின இயற்றமிழோடு இசைத் தமிழுங் கலந்த பாக்களாகும்; இவ்வாறு இசைத் தமிழோடு கலந்து கலந்து பாடப்படுவன வரிப்பாட்டு எனப்படுதலும். அது பல்வகைப் பாகுபாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/299&oldid=1587814" இலிருந்து மீள்விக்கப்பட்டது