உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 18

267

உடைத்தாய் நடைபெறுதலும் 'சிலப்பதிகாரத்’ தும் அதன் உரையினுங் காண்க.2 அம்மானை வரி, ஊசல்வரி என்பன; திருவாசகத்தில் உள்ளவாறே சிலப்பதிகாரத்தினுங் காணப்படுதலை அவ்விரண்டி னுள்ளுமிருந்து ஒவ்வொரு செய்யுள் எடுத்துக் காட்டித் தெளிவிப்பாம்:

“பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் கற்றிய கற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்”

என்னுந் திருவாசகத் திருவம்மானைப்பாட்டை (20) "வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை ஓங்கரணங் காத்த உரவோ னொளிவிசும்பிற் றூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கண் அம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை.

993

என்னுஞ்சிலப்பதிகார அம்மானை வரியோடு ஒப்பிட்டு நோக்குக.

“கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞாலம் மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை

மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்

பூலித் தகங்குழைந்து பொன்னூச லாடாமோ.

என்னுந் திருவாசகத் திருப்பொன்னூசற் பாட்டை (8)

66

'ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த

போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்”4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/300&oldid=1587822" இலிருந்து மீள்விக்கப்பட்டது