உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் - 22

என்னுஞ் சிலப்பதிகார ஊசல் வரியோடு ஒப்பிட்டு நோக்குக.

L

இவைபோன்ற வரிப்பாட்டுகள், தமிழும் தமிழ் மக்களும் மிகச் சிறந்திருந்த பண்டைக் காலத்திலேதான் மலிந்து விளங்கினவே யல்லாமல், ஆரியக் கலப்பால் தமிழுந் தமிழ் மக்களுங் கிளர்ச்சி குன்றிப்போய் பிற்காலத்தே பெருகினவல்ல; இத்தகைய வரிப்பாட்டுக்களைப் பின்றைக்காலத்து நூல்களிற் காண்டலும் அரிது. உண்மை யிவ்வாறிருப்பவும், இதனைத் திரித்து முழுதும் பிறழக்கூறிய 'தமிழ்வரலாறு' உடையார் திறம் எத்துணைச் சிறந்தது! இவர், சிலப்பதிகாரத்தை ஒருமுறை யாயினும் முற்றும் பார்த்திருப்பாராயின் இங்ஙனம் பிழைபட உரையார் வரிப்பாட்டுகளும், அவற்றோடு கூடிய பல்வரிக் கூத்துகளும் பண்டைக்காலத்திற் பெரிதும் மலிந்திருந்தன வென்பது உரைகாரர் அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய ‘சிந்துப் பிழுக்கையுடன்' என்னும் நீண்ட கலிவெண்பாட்டால் நன்கு துணியப்படும். இந் நீண்ட செய்யுளின் எடுத்துக் கூறப்பட்ட பல்வரிக் கூத்துகள் பலவற்றுள், திருவாசகத்தின்கட் காணப்படும் அம்மானை; வண்டு (திருக்கோத்தும்பி), தோள் வீச்சு (திருத்தோணோக்கம்), சாழல், உந்தி, அவலிடி (திருப்பொற் கண்ணம்), கொய்யு முள்ளிப்பூ (திருப்பூவல்லி) படுபள்ளி (திருப்பள்ளி யெழுச்சி) முதலியனவெல்லாங் கூறப்பட்டிருத்தல் காண்க. இவ்வாறெல்லாம் பண்டைத் தமிழர்க்கே யுரிய இசைத்தமிழ் நாடகத்தமிழ் முறைகளை யொட்டிப் பாடப்பட்ட தமிழ்நூல்கள் பின்றைக் கால லக்கியங்களுள் யாண்டுங் காணப் காணப்படாமை யானும், அவற்றோடு ஒட்டிய 'சிலப்பதிகாரம்’, சிலப்பதிகாரம்', ‘பரிபாடல்', முதலிய நூல்களெல்லாம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இயற்றப்பட்டனவாதல் தெளியப்படு கின்றமையானும் அப் பழைய இசை நாடகவழக்குப் பற்றிவந்த 'திருவாசகமும்’, சிலப்பதிகாரத்தை யடுத்துத் தோன்றிய நூலாதல் திண்ணமா மென்க. இங்ஙனமாகத் திருவாசகத்தின் பழைமையை நாட்டுதற் குரிய வரிப்பாட்டு வகைகளையே, அதன் புதுமையை நாட்டுதற் கேற்ற கருவிகளாக எடுத்துரைத்த ‘தமிழ் வரலாறு' உடையார் அறிவின் பிறழ்ச்சி பெரிது! பெரிது!

'கலித்தொகை’,

6

இனிப், பாட்டியலிற் சொல்லப்படும் நூல்வகைகளுட் பெரும்பாலான தேவாரகாலத்திற்குப்பின் எழுந்தனவேயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/301&oldid=1587831" இலிருந்து மீள்விக்கப்பட்டது