உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

269

6

மென்றும். அதனால் அந் நூல்வகைகளுள் ஒன்றாகிய 'கோவையின்பாற் படுந்' 'திருச்சிற்றம்பலக் கோவையார்’ தேவார காலத்திற்குப் பிற்பட்டதேயா மென்றும் 'தமிழ் வரலாறு' உடையார் வரைந்ததனைச் சிறிது ஆராய்வாம். பல்வேறு நூல் யாப்புகளைச் சொல்லும் வச்சணந்தி மாலையின் உரைகாரர், அவ்வச்சணந்திமாலை இந்திரகாளியம் என்னும் நூலுக்கு வழிநூலாகச் செய்யப்பட்ட தென்றுரைத் தார். ஆகவே, வச்சணந்திமாலையிற் காணப்படும் நூல் வகைகளிற் பல ‘இந்திரகாளியம்' என்னும் நூலிற் சொல்லப் பட்டவைகளே யாதல் பெறப்படும். 'பன்னிரு பாட்டியலிற்’ காணப்படுஞ் சூத்திரங்களிற் பல இந்திரகாளியத் தினின்றும் எடுக்கப்பட்ட வைகளென்று குறிக்கப்பட்டிருத் தலானும்; அச் சூத்திரப் பொருள்கள் வச்சணந்தி மாலை நூற்பொருளையே ஒத்திருத்தலானும்; இவ் விந்திர காளியத்தைப் பழையதோ ரிசைத்தமிழ் நூலாகக்கொண்டு அடியார்க்கு நல்லார் அதனைத் தமதுரையில் மேற்கோளாக எடுத்தாளுதலானும், இவைகளிற் சொல்லப்பட்ட உலா, அந்தாதி, மும்மணிக் கோவை என்பன எட்டாம் நூற்றாண் டின்கண் இருந்த ம் சேரமான் பெருமாள் நாயனாராலும் இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி முதலியன நான்காம் நூற்றாண்டிலிருந்த காரைக்காலம்மை யாராலும், கைலைபாதி, காளத்திபாதி யந்தாதி, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழு கூற்றிருக்கை, திரு முருகாற்றுப்படை திருக் கண்ணப்ப தேவர் திருமறம் முதலிய நூல்வகைகள் கி.மு. முதல் நூற்றாண்டின் கண்ணும் ஐந்தாம் நூற்றாண்டின் கண்ணும் இருந்த வெவ்வேறு நக்கீரராலும் அருளிச் செய்யப்பட்டிருத் தலானும் இந் நூல்வகைகளெல்லாம் தேவாரகாலத்திற்குப் பின்னுண்டாயின வென்றல் தமிழ் நூலாராய்ச்சி நன்கு வாயாதார் கூற்றாம்.

L

இனித், தசாங்கம், பிள்ளைத்தமிழ் முதலிய வகைகளும் பழைய திவாகர நிகண்டிற்” சொல்லப்பட்டிருத்தலின் அவையும் பழைய காலத்தனவேயாம். இன்னும் இத்திறத்த நூல்வகை களெல்லாம் ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்துரைத்த எண்வகை வனப்பினுட் படுதலும், உரைகாரரான பேராசிரியர் கார், களவழி, காப்பியம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/302&oldid=1587839" இலிருந்து மீள்விக்கப்பட்டது