உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் 22

யெல்லாம் அவ்வனப்பினுட் கொணர்ந்து அடக்குதலுங் கண்டுகொள்க. இன்னுந் ‘திருக்கோவையா’ரிற் காணப்படுஞ் செய்யுட் பொருள்களோடு ஒத்த அகப்பொருள்கள் அகநானூறு’, ‘நற்றிணை’, ‘குறுந்தொகை’ முதலியவற்றில் அமைந்திருக்கின்றன. பொருள்வகையில் இச் சங்கத் தமிழ் நூல்களுக்கும் ‘திருக்கோவையா’'ருக்கும் ஏதொரு வேற்றுரையுங் காணேம். இனி, அளவினாலும் அவற்றிற்கும் இதற்கும் வேறுபாடு காண்கின்றிலம். என்னை? பிற்காலத் தழுந்த 'தஞ்சைவாணன் கோவை’ முதலாயின நானூறுக்கு மேற்பட்ட செய்யுட்களான் மிக்கு முடிந்தவாறுபோல் இல்லாமல், திருக்கோவையா' ரின்கண் ரின்கண் உள்ளவை. அகநானூறு', ‘நற்றிணை’, ‘குறுந்தொகை' யிற்போல நானூறு செய்யுட் களாலேயே முடிந்திருக்கின்ற வாகலின் என்க. புறப் பொருள் பற்றிவந்த ‘புறநானூறும்', அறம்பொருள் இன்பங்களைக் கூறும் 'நாலடியார்', 'பழமொழி' என்பனவும் நானூறு நானூறு செய்யுட்களால் ஆக்கப்பட்டிருத்தலும் உற்று நோக்கற் பாலதாம். இவ்வாறு சங்கத்தமிழ் நூல்களிற் சிறந்தன பல, நானூறு நானூறு செய்யுட்களினால் ஆக்கப் பட்டிருத்தல் போலவே, திருக்கோவையாரும் நானூறு செய்யுட்களால் ஆக்கப் பட்டிருத்தலை ஆராயுங்கால், திருவாதவூரடிகள் சங்கத் தமிழ்க் காலத்தை அடுத்து வந்தமைபற்றியே அந் நூல்களிற் சிறந்த பலவற்றின் செய்யுள் அளவினைத் தாமும் தழீஇயனார் என்க. மற்று, மேற்காட்டிய சங்கத் தமிழ் நூல்கட்கும், திருக்கோவையா'ருக்கும் வந்த வேறுபாடெல்லாம், அச் சங்கத்தமிழ் நூல்களுள் யாண்டுங் காணப்படாத ‘கட்டளைக் கலித்துறையென்னும் பாவினால் இஃது ஆக்கப்பட்டிருத்தலே யாம். இக் கட்டளைக் கலித்துறை யாப்பு மூன்றாம் நூற்றாண்டிற் புதிது புகுந்த தொன்றாயினும், அது பண்டைத் தமிழ்ப் பாக்களுக்கு முற்றும் வேறுபட்டதன்று. அது பழைய கலிப்பாவினின்று பிறந்த தொன்றாம். கலிப்பா பெரும்பாலும் நான்கு சீராலாகிய அடிகளால் ஆக்கப்படுவதேயாயினும், ஒரே வழி ஐந்துசீரானும் ஐந்திற்குமேல் ஆறு ஏழுசீர் அடிகளானும் அஃது ஆக்கப்பட்டு வருதலும் பண்டைச் செய்யுள் வழக்கின்கண் உண்டு; இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்.?

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/303&oldid=1587848" இலிருந்து மீள்விக்கப்பட்டது