உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

271

66

'அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

இருநெடி லடியுங் கலியிற் குரிய.”

என்று ஓதுமாற்றால் அறியப்படும். எனவே, ஐஞ்சீரடியான் வந்த கலிப்பாவே வரவர வெண்டளையும் எழுத்து வரையறையும் உடைத்தாய் மாணிக்கவாசகப் பெருமான் காலம்முதற் கலித்துறை’ என்னும் பெயர் கொண்டு

“கட்டளைக் வழங்கலாயிற்று.

அஃதொக்குமாயினும், 'கட்டளைக் கலித்துறை' ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து திருநாவுக்கரசு நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் காலம் முதற் கொண்டுதான் ‘தேவாரத்’திற் பயின்று வரலாயிற்றென்று கூறுதலாற் படும் இழுக்கென்னை யெனின்; தேவாரத்தில் முற்றும் புதுத் தமிழ்ப் பாக்களே காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் அருளிச் செய்த 'திருவெழு கூற்றிருக்கை’ என்னும் ஓர் அகவலைத் தவிர, வேறு அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்னுந் தூய பழந்தமிழ்ப் பாக்களைத் தேவாரத்தில் ஒரு சிறிதுங் காண்டல் இயலாது. ஆகவே, தேவார காலத்தில் தூய பழந்தமிழ்ப்பாக்கள் முற்றும் வழக்கு வீழ்ந்துபோக, அவற்றினின்று பையப்பையத் தோன்றி வளர்ந்துவந்த புதுத் தமிழ்ப்பாக்களே முற்றும் நிலை பெற்றுப் பெருகி வழங்கலாயினமை ஐயமின்றித் தெளியப்படும்.

மற்று, மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் நூல்களினெல்லாம் மேற்குறித்த தூய தமிழ்ப்பாக்களே காணப்படுமல்லாமற், “கட்டளைக் கலித்துறை’ ‘விருத்தம்’ முதலிய புதுத் தமிழ்ப்பாக்கள் மருந்துக்கும் அகப்படா அங்ஙனம் அவை ஆண்டு மருந்துக்கும் அகப் படாவாயினும். பழைய தமிழ்ப்பாக்களாகிய கலி ஆசிரியம் முதலியவற்றி னின்றே அவை பிறந்தமை மேற்காட்டினமாகலின், அவை இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இடையே நானூறாண்டுகள் கழித்து ஏழாம் நூற்றாண்டில் திடுமெனத் தோன்றித் ‘தேவாரத்’ தில் முழுதும் நிலைபெற்றுப் பழைய தமிழ்ப்பாக் களை ஒட்டித், தமிழகத்தைத் தாம் முற்றுங் கவர்ந்துகொண்டன வென்றல், ஓர் அரசியின், அகட்டினின்று கதுமெனப் பிறந்த ஒரு பச்சிளங் குழவி உடனே தன் அன்னையைத் தொலைத்து விட்டுத தானே முடிகவித்துத் தன்அரசின்கண் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/304&oldid=1587857" இலிருந்து மீள்விக்கப்பட்டது