உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

281

வந்தமையால், ஆரியர்க்கு முற்றொட்டே வடநாடெங்குங் குடியேறியிருந்த பண்டைத் தமிழ்மக்கள் தமது தமிழ்மொழிப் பயிற்சியைப் பையப் பையக் கைவிட்டு, தம் பின்னோர் நினைவு கூர்தற் பொருட்டுத் தாந்தாஞ் செய்த செயல்களை அவ்வக் காலத்து மிக்கு வழங்கிய அயல்மொழிகளிலேயே கற்களிற் செதுக்கி வைப்பாராயினர்.?

இங்ஙனமே,

7

ஐரோப்பாவிலும் ஆசியாவின்

பல

பிரிவுகளிலுங் கல்வெட்டுகள் தோன்றினமைக்கு ஏது, அந் நாடுகளிற் பண்டைநாளிலிருந்த மக்கட் பிரிவினர் பலருங் காடுத்தன்மையுங் கொடுஞ் செயலும் உடையராய் ஒருவரை யொருவர் அலைத்து, நெருப்பினுஞ் செந்நீரினும் அந்நாடுகளை மூழ்குவித்துப் பெருங் குழப்பங்களை உண்டாக்கி வந்தமையே யாம். எனவே, அயலவர் கலப்பினாலும் அவரால் நேர்ந்த அல்லல்களாலும் வட நாட்டின்கட் கல்வெட்டுகள் அமைத்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டுப் பின்னர் அங்கிருந்து தெற்கு நோக்கிப் போந்து ஒருநானூறு ஆண்டுகள் வரையில் அரசு செலுத்திய தமிழரில் ஒரு பிரிவினரான ஆந்திரர் என்னும் வடுகரால் அவ்வழக்கம் தக்கணத்திற் பரவி, அதன்பின் அவ்வாந்திரர் வழிவந்த பல்லவர் தமிழ்நாட்டின்கட் போந்து நிலைபெற்ற காலமுதல் அஃது இங்கும் பரவலாயிற்று. இதனாலன்றோ பல்லவர் புகுதற்குமுன் அமைக்கப்பட்ட கல்வெட்டு ன்றாயினும் இத் தென்றமிழ் நாட்டில்

துவரையில் வெளிவந்திலது. இதனாலன்றோ மாணிக்க வாசகராற் குறிப்பிடப்பட்ட வரகுண பாண்டியன் வரலாற்றைப் பற்றிய கல்வெட்டு ஒன்றும் இதுகாறும் அகப்பட்டிலது. ஆகவே, பல்லவ ராட்சிக்கு முற்பட்ட வரலாறுகளை ஆய்ந்துரைத்தற்குப் பழைய தமிழ்நூல்களே பெரிதும் பயன்படுவனவென்பது உணரல்வேண்டும். பல்லவ ராட்சிக் காலத்தில் உண்டான கல்வெட்டுகளைக் கொண்டு, அவற்றை நன்காராய்ந்து வரையவேண்டுமேயல்லாமல், நூற்பொருள் களோடு ஒவ்வாமல் முரணும் கல்வெட்டுகளையே கருவியாகக் கொண்டு ஒரு வரலாற்றினை வரைந்து முடிவு கட்டுவது பிழைபடுதற்கு ஏதுவாம் இவ்வுண்மை, கால வரலாற்றுத் துறையில் தேர்ச்சிபெற்று விளங்கும் திருவாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களாலும் தாம் இயற்றிய 'தென்னிந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/314&oldid=1587868" இலிருந்து மீள்விக்கப்பட்டது