உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் 22

வரலாற்றுத் துவக்கம்’8 என்னும் ஆங்கிலநூலில் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.

இனித், தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய வேங்கடத் திற்கு அப்பாலிருந்த வடுகநாட்டிலிருந்து வந்தவர்களை யெல்லாம் தமிழர் 'வடுகக் கருநாடர்’, எனவே வழங்கினர். ‘கல்லாடம்’, ‘பெரியபுராணம்' 'நம்பியார் திருவிளையாடல்' முதலியவற்றிற், பாண்டி நாட்டில் வந்து பாண்டியனரசைக் கைப்பற்றிக் கொண்டவராகச் சொல்லப்படும் வடுகக் கருநாடர் என்போர் முதன்முதல் வடக்கிருந்து தென்றமிழ் நாடடிற் புகுந்த பல்லவ அரசரேயாதல் வேண்டும். இப் பல்லவ அரசர்க்கு உறவினரான ஆந்திர வடுகர் கி.மு.73ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 218ஆம் ஆண்டுவரையில் தக்கண நாட்டிற் சிறக்க அரசு புரிந்து வந்தனர்.

இத் தக்கண நாடென்பது, மிகப் பழைய காலத்தில், வடக்கே நருமதையாற்றங் கரையையும், தெற்கே கிருஷ்ணை யாற்றங் கரையும், மேற்குங் கிழக்கும் மேல்கடல் கீழ் கடற்கரை களையும் எல்லைகளாக உடைய ஒரு பெரிய நிலப்பரப்பாகும்;

து. மேல்பால் மகாராட்டிர தேயத்தையும், கிழக்கே தெலுங்கானத்தையும், கோதாவரி யாற்றங் கரையினெடுக ருமருங்குமுள்ள 'தண்டகாரணியம்' என்னுங் காட்டையும் உள்ளடக்கியதாகும். 'குமரிநாடு' கடல் கொண்டகாலத்து, அப் பெருநாட்டிலுறைந்த தமிழ் மக்களின் பல்பெரும் பிரிவினரான பிராகுவியர்," ஆந்திரர், கோடர், தோடர், கோண்டர், நாகர், துளுவர், கருநாடர், மலையாளர், வேளாளர் முதலாயினார் வடக்கும் வடகிழக்கும் வடமேற்குமுள்ள பல்வேறு நாடுகட்கும் பிரிந்து போய்க் குடியேறுவாராயினர்; அப்போது, இவ் விந்திய நாட்டின் மேல்கரை வழியே வடக்கே சென்றோருள் முற்பட்டவரான 'பிராகுவியர்' வடமேற்கே பெலுசித்தானம் வரையிற் சென்று அங்கே குடியேறினர்; அவர்க்குப்பின் ஆந்திரர்’ கீழ்கரை வழியே சென்று கங்கையாற்றங் கரையை யடுத்த வட நாடுகளிலும், நருமதை கோதாவரி கிருஷ்ணை முதலான ஆறுகளையடுத்த தக்கணநாட்டின் பகுதிகளிலுந் தங்கினர்; அவர்க்குப்பின் அவரையடுத்துச் சென்ற ‘கோடர்’, ‘கோண்டர்’, ‘நாகர்’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/315&oldid=1587869" இலிருந்து மீள்விக்கப்பட்டது