உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

1✰

283

என்போர் முறையே நீலகிரியிலும், நாகபுரியின் வடபால் உள்ள மலைகளிலும், தக்கணத்திலுள்ள காடுகளிலும் குடியேறினர்; ‘துளுவர்’, ‘கருநடர்’, எருமை நாட்டில் (மைசூரில்) போய்ப் பரவினர்; ‘மலையாளர்’, கீழ்கரை யோரமாயுள்ள நாடுகளிற் குடிபுகுந்தனர்; 'வேளாளர்' மலையாளத்தின் கிழக்கே குமரி முதல் வேங்கடம் ஈறாயுள்ள நாடுகளிற் சென்று நிலைபெற்றனர்.

பல்பெரும் பிரிவினரான இத்தமிழ் மக்களுள் அஞ் ஞான்று நாகரிகத்திற் குறைந்தோரான 'பிராகுவியர்’ தமிழ்நிலங் கடல் வாய்ப்படுதல் கண்டவுடன் அஞ்சித் தம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும் பண்டமும் பிறவும் இல்லாமையின் அவர் எல்லாரினும் முற்பட்டு நெடிது சென்றார்; 'வேளாளர்' ஏனையெல்லாரினும் பார்க்க நாகரிகத்திற் சிறந்திருந்தமையின் கடல்கோளைத் தடுத்து நிற்கக் கூடுமளவும் நின்று, பின்னர் அங்ஙனம் நிற்க இயலாத எல்லை கண்டவுடன் தாமிருந்த பழைய நிலத்தைவிட்டு மெல்ல மெல்லப் பெயர்ந்து நீளச் செல்லாமல் இத் தென்னிந்திய நாட்டின்கண் தங்கி இதனைப் பலவாற்றானும் வளம்படுத்த லாயினர். இங்ஙனஞ்சென்று ஆங்காங்கு குடியேறிய பண்டைத் தமிழ் மக்கள் பல்லோருள் தக்கணத்திற் சென்று வைகிய ‘நாகர்’ என்னும் வகுப்பினரே பிற்காலத்தில் நாகரிகத்திற் சிறந்தபின் ‘பல்லவர்' என வழங்கப்பட்டார். 'பல்லவர்' என்னும் இச் சொல் யாங்ஙனம் வந்ததெனின், 'வேளாளர்' என்னுந் தமிழ்ச் சொல் கல்வியறி வில்லாரால் 'வெள்ளாளர்' என வழங்கப் படுதல் காண்டலின், அதுவே வடக்கே பின்னுஞ் சிதைந்து ‘பல்லவா' என ஆயிற்றென்று உய்த்துணரல் வேண்டும். தக்கணத்திற் பல்லவ ரோடு ஒருங்கு உறைந்து, பின்னர் அவர்க்குப் பெரும்பகைவராய் மாறிய 'சாளுக்கியர்' பழைய 'திவாகர நிகண்டில்' வேள்புல அரசர் என்று கூறப்படுதலை உற்று நோக்குமிடத்து, ஆந்திரர் சாளுக்கியர் பல்லவர் முதலியோர் பழைய வேளாளரினின்று பிரிந்தவராவ ரென்பதூஉம். அங்ஙனம் வேளாளராதல் பற்றியே அவரெல்லாம் ஒருங்குறைந்த ‘தக்கணதேயம்’ அக்காலத்தில் 'வேள்புலம் எனப் பெயர்பெற்ற தென்பதூஉம் உய்த்துணரற் பாலனவாம்.

ச்

நாகப்பட்டினத்துச் சோழன் ஒருவன் நாகநாட்டின்கட் சென்று நாககன்னியொருத்தியை மணந்து பெற்ற பிள்ளையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/316&oldid=1587870" இலிருந்து மீள்விக்கப்பட்டது