உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் 22

தொண்டை (ஆதொண்டை)க் கொடிகட்டி அவள் கடல் வழியே விடுப்ப, அங்ஙனம் வந்த பிள்ளைக்குத் தனது நாட்டின் வடபகுதியைப் பகுத்துக்கொடுத்து அரசேற்றிவைக்க அவன் அரசாண்ட நாடு 'தொண்டை நாடு' என்னும் பெயர்த்தாயிற்று என்று உரைகாரர் நச்சினார்க்கினியர். “திரை தரு மரபின் உரவோன் உம்பல்” என்னும் பெரும்பாணாற்றுப் படையடிக்கு (31) வரைந்திருக்கும் உரையும்.

“வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலிவளை தான்பயந்த

புனிற்றிளங் குழவியை.”

(29, 3-5)

ான

என மணிகேலை கூறும் பகுதியும் கரிகாற்சோழன் மரபில் வந்தோனான கிள்ளிவளவனுக்கும், நாகநாடெனப்பட்ட தக்கணத்திலிருந்த பழைய நாகமன்னன் ஒருவனுக்கும் உண்ட தொடர்பையும் அத் தொடர்பிலிருந் துண்டான மன்னன் ஆகிய இளந்திரையன் காலந்தொட்டுச் சோழநாடு தென்பாலும் வடபாலும் என இருகூறாகப் பிரிந்து, வடபாலுள்ளது தொண்டை நாடெனவும் தென்பால் உள்ளது பழைய சோழ நாடெனவும் வழங்கலானமையுங் காட்டா நிற்கின்றன.

கிள்ளிவளவன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தவனாக, அவனை ‘நாகபட்டினத்துச் சோழன்' என்று நச்சினார்க்கினியர் வரைந்ததென்னையெனின்; நாகநாட்டிலிருந்த பீலிவளை தான் ஈன்ற புதல்வனை மரக்கலத்தில் ஒரு கம்பளச்செட்டியிடம் ஒப்புவித்து விடுப்ப, அம் மரக்கலங் காவிரிப்பூம் பட்டினக் கரைக்கு அணித்தாக வருகையில் ஏதோ பிழை நேர்ந்து முழுகி, அப்பிள்ளை காணாமற்போக, அஃதுணர்ந்த கிள்ளிவளவன் பெரிதும் ஆற்றானாகித் தன் மகனைத் தேடும் முயற்சியில் இந்திரனுக்கு விழாவெடுத்தலை மறந்துவிடவே, அத் தெய்வங் காண்ட சீற்றத்தாற் கடல் பொங்கிக் காவிரிப்பூம் பட்டினத்தை அழித்ததென மணிமேகலை கூறுதலின்," அவ்வரசன் அழிந்து பட்ட தன் நகருக்குக் கரைவழியே அருகில் உள்ளதாகிய நாகபட்டினத்தில் வந்து வைகிப், பின் பின் அங்கே அரசு சலுத்தினானாதல் வேண்டும். அதுபற்றியே நச்சினார்க் கினியர் அவனை நாகபட்டினத்துச் சோழன் என்றார். இவ்வாறாகச் சோழ நாட்டின் வடபாலைக் கிள்ளிவளவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/317&oldid=1587872" இலிருந்து மீள்விக்கப்பட்டது