உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

29

இல்லையென்று பாழ்ங்கொள்கை பேசிய சமணராற் கடவுளை நம்பினார்க்கு இழைக்கப்பட்ட கொடுந் தீங்குகளை யெல்லாம் வியத்தகு கடவுளருள் நிகழ்ச்சிகளாற் சுவடறத் தொலைத்து, எல்லாம் வல்ல இறைவனருட் பேற்றிற்கு எல்லாரும் உரியராம்படி அவ் வருள் ஒளியை இத் தமிழ் நாடு யாங்கணுந் திகழச் செய்த அளப்பருந் தெய்வமாட்சியில் ஒப்பாரும் மிக்காரும் இலராயினும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தய்வப் பாக்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்'தைப் போல் ஓதுவார் நெஞ்சத்தை உருக்குந் தகையஅல்ல. அஃது ஏனென்றால் திருஞானசம்பந்தர், இந் நிலவுலகின்கண் மக்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்துவருங் கவலை நோய் காமம் வெகுளி பொய் புரட்டுக் கொலை களவு துயர் முதலான பல்வேறு அல்லற் படுகுழிகளைக் கண்டு, அவற்றின் கட் கிடந்து துன்புறும் மக்கட் பகுப்பினர் தம் நிலைகளையெல்லாம் உணர்ந்தவர் அல்லர். இவ்வுலக வாழ்க்கையின் இடர்களை உணர்வதில்லாச் சிறு குழவிப் பருவத்திலேயே, அம்மையப்பர் அருளுருவினை நேரே கண்டு அதன்கட்டமது உணர்வு முற்றும் பதியப் பெற்றவர். உலக இயற்கைத் தோற்றங்களிலுள்ள அழகுகளும், இறைவன்றன் இவர்தம் பாடல்களிற் பெரும் பாலுங் காணப்படுதற்கு இதுவே ஏதுவாகும். இவர் குழவிப் பருவங்கடந்து இளமைப்பருவத்தை எய்தியகாலத்தே. உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்கள் சில இவரது உணர்வுக்குப் புலனாகத் துவங்கினவென்பது, அப்போது அவரருளிச்செய்த சில திருப்பதிகங்களால் உய்த்துணரக் கிடப்பினுந், துன்பம் நிறைந்த இவ் வுலக வாழ்விற் பெரிதும் வெறுப்புற்று, அவர் தமது திருமணம் நிகழ்ந்த அஞ்ஞான்றே இறைவன் றிருவருளிற் கலந்திட்டா ராகலின், மக்களின் துன்ப நிலைகளையும், அவற்றினின்று திருவருளுதவியால் மீண்டு இறைவனருளைத் தலைக்கூடும் வகைகளையும் மாணிக்கவாசகரைப் போல் அத்துணை உருக்கமாக எடுத்து விரித்துப் பாடுதற்கு அவர் இடம்பெற்றிலர் மற்று, மாணிக்கவாசகரோ அவரைப்போல் தமது குழவிப் பருவத்திலேயே இறைவனைக் கண்டு, சிறிதுகாலத்தில் அவனருளிற் கலந்தவரல்லர். ஏனை மக்களுட் சிறந்த குடிப்பிறந்த மகாரைப்போல், அஞ்ஞான் றுள்ள

அருள்மாட்சிகளுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/62&oldid=1587508" இலிருந்து மீள்விக்கப்பட்டது