உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

1✰

33

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் எல்லாருங் கண்டனர்; கொற்றாளாய் வந்து பாண்டியன் கைப் பிரம்பால் அடியுண்டு மறைந்த கோலத்தினையும் அங் ஙனமே ஆண்டிருந்தாரெல்லாருங் கண்டு மெய்ம்மறந்த நிலையினரானார். அதனால், எல்லாம்வல்ல சிவபிரான் மாணிக்கவாசகர் பொருட்டு எல்லார்க்கும் எதிரே எளிய னாய்த் தோன்றி மறைந்தாற்போல், வேறெவர் பொருட்டும் எங்கேனுஞ் செய்ததுண்டோ வெனின், அதற்குச் சான் றின்மையின், அவ்வாறு செய்ததில்லையென்பதே தேற்றமா மென்று முடிக்க.

இவ்வாறு, எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை நேரே கண்டு அவற்கு அடிமையாகி அவன்மேற் குழைந்து குழைந்து அழுதழுது பாடிய மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓதியுருகாதார் நெஞ்சம் வேறெதனாலும் உருகா தென்பதுபற்றி யன்றோ,

“திருவாசகத்தின் உருகார் மற்றொருவாசகத்தும் உருகார்”

என்னும் பழமொழியும் யாண்டும் வழங்கிவருகின்றது. நெஞ்சக்கசிவு, நெஞ்சக்குழைவு இல்லாதவர்கட்கு அருளும் அன்பும் இரக்கமும் உண்டாகா; அவையில்லாதவர்கள் தம்மோடொத்த மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்களிடத்தும் அருளும் அன்பும் இரக்கமும் உடையராகார்; இச்சிறந்த மென்குணங்கள் இல்லாதவர்கள் இம்மையிலும் இனிய வாழ்க்கையினை எய்தாராய் பெரிதுந் துன்புற்று மடிவதோடு, மறுமையிலும் இறைவனருளைப் பெறாராய் இழிந்த பிறவிகளிற் சென்று புகுந்து துன்புறாநிற்பர். தமக்கு பிறவியைத் தந்த தலைவன்பால் நன்றிமிக்கு, அவனை உரு வழுத்தாதவர்க்கு இம்மை மறுமையிரண்டிலும் ன்ப மில்லையாதலாலும், தமக்குப் பேருதவி செய்த தலைவனை வணங்கி வழுத்துதல்விட்டுத் தம் தலைவனல்லாத மக்களையும் ஏனைச் சிற்றுயிர்களையுந் தம் தலைவனாகப் பிழைபடக் கொண்டு வழிபடுவார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்கள் வாயாவாதலாலும், தந்தலைவன் இன்னவன்றான் என்றுணராருந் தமக்குத் தலைவனேயில்லையென்று மறுப்பாரு மான போலியாசிரியர்களைப் பின்பற்றி நிற்பார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பேறுகள் வாயாவாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/66&oldid=1587512" இலிருந்து மீள்விக்கப்பட்டது