உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

  • மறைமலையம்

22

திண்ணமாமாதலாலும்,

உலகுயிர்கட்கெல்லாம்

ரே

தலைவனாய்த் தாயுமிலி தந்தையிலியாத் தனிநிற்குஞ் சிவ பிரானை நேரேகண்டு அவன்பால் என்பெலாம் நெக்கு நெக்குருகப் பாடிய மாணிக்கவாசகர் தந் திருவாசகம் ஒன்றே நமக்கு இம்மை மறுமைப் பேறுகளெல்லாம் ஒருங்கே யுதவுமென்று கடைப்பிடித்தல் வேண்டும்.

இத்துணைச் சிறந்த தெய்வத் திருவாசகத்தையும் அதனை அருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமானையும் இத் தன்றமிழ் நாட்டிலுள்ள நன்மக்கள் முறையே ஒப்புயர் வில்லாத் தமிழ்மறையாகவும் சமயாசிரியராகவும் வைத்து வழிபட்டுவருதல், அவர்தம் மெய்யறிவின் மாட்சியையே விளக்கிக் காட்டுகின்றது. ஏனை எந்த நாட்டவர்க்கும் வாயாத இவ் வரும்பெரும்பேறு தமக்கு வாய்த்திருத்தலை நன்குணர்ந்த தமிழ்மக்கள், திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயிலில் மாணிக்க வாசகரையே சிவபிரானாக வைத்து வழிபாடு செய்து வறு

வருவது பெரிதும் போற்றற்பாலதொன்றாம்.

நாடகக்காப்பியம் இயற்றிய செகப்பிரியர் என்னும் ஆங்கில நல்லிசைப்புலவர் உயிர்வாழ்ந்த இல்லத்தையும் ஒரு கோயிலாக்கி, இவ் வுலகமெங்கணுமுள்ள ஆங்கில அறிஞர்கள் மெய்யன்புடன் அங்கே சென்று அங்கு அமைந்திருக்கும் அவர்தம் உருவத்தை வணங்கிச் செல்கின்றார்களென்றால், எவராலுங் காணமுடியாத கடவுளைக் கண்டு அவர்க்குந் தமக்கும் உண்ட ான கழு யல்லாம் எம்மனோர்க்குத் தெய்வத் தமிழ்ப் பாக்களால் தெளிய அறிவுறுத்திய இத்தெய்வ ஆசிரியர் மாணிக்கவாசகரை, இத்தென்றமிழ் நாட்டவரேயன்றி இவ்வுலக மெங்கணுமுள்ள அறிஞர்களெல்லாரும் வந்து வணங்கிப் பெறற்கரும் பேற்றைப் பெறுகவென்றழைத்தல் எம்மனோர்க்கு இன்றியமையாத கடமையன்றோ?

வரும்பெருங்

தகைமைகளை

கடமையினை

நன் கு

இவ் நிறை வேற்றுதற் பொருட்டாகவே, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் இப் பெருநூலினை மாணிக்கவாசகப் பெருமான் திருவடித் துணை கொண்டு ஆறு ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/67&oldid=1587513" இலிருந்து மீள்விக்கப்பட்டது