உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம்

22

அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம்.

இனி, அடிகளிருந்த காலமும் அக் காலநிலையும்

உண்மையாக

விளங்கினாலன்றி, அவரது வரலாற்றி னுண்மையும், அவர் அருளிச்செய்த நூல்களின் உண்மை யும், அவற்றின் வாயிலாக அறியவேண்டி நிற்கும் முற் கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக்

காலங்

களில் தமிழ்மொழி தனித்தமிழுங் கலப்புத்தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற

அரசியல் களின் உண்மையும் அவ்வக் காலங்களில் திரிபெய்திவந்த ஒழுக்கங்களின் உண்மையும் பிறவும் உள்ளவாறறிதல் இயலாது நூல்களின் காலவரையறை தெரியாதவரையிற், பழையது புதியதாகவும் புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும் பொய் மெய்யாகவும், முன்னிருந்த ஆசிரியர் பின்னிருந்த வராகவும் பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப் பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடு மாற்றமே தலைவிரித்தாடும். இத் தலைதடுமாற்றப் பேயாற் பிடியுண்டு நிற்கும்வரையில் மக்கள் பொய்யான வழிகளில் அலைந்து திரிந்து மீளாத் துன்பத்திற்கு ஆளாகி நிற்பர். ஆனதனாற்றான், உண்மையை யுள்ளவாறுணர்ந்து இம் மக்கட்பிறவியை உண்மைநெறியிற் செலுத்தி முன்னேற்று தற்கு, அறிவையும் இன்பத்தையும் நமக்கு வழங்கிய நம்மாசிரியரிருந்த காலங்களையும் அக் காலநிலைகளை யும் உணர்வதில் ஐரோப்பிய அறிஞர்கள் பெருவேட்கை யும் பெருமுயற்சியும் உடையவர்களா யிருக்கின்றனர். முற்காலத் திருந்த அறிஞரின் உண்மைநிலைகளை யெல்லாம் உண்மையாக ஆராய்ந்தறிந்து, உண்மையறிவில் தலைசிறந்து வருதலினாற் றான் மேனாட்டு வெண்மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் நாகரிகத்திலும் இன்பவாழ்விலும் நாளுக்குநாள் வளர்பிறை போல் வளர்ந்து, அவ்வுண்மையறிவு வாயாத மற்றை நாட்டவர்களையெல்லாந் தம் அடிக்கீழ்ப் படுத்துச் செங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/69&oldid=1587515" இலிருந்து மீள்விக்கப்பட்டது