உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

37

லோச்சி வருகின்றனர். கால ஆராய்ச்சி செய்து அவ்வக்கால நிலைகளையும் அவ்வக்காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமையினாற்றான், நம்நாட்டவர்கள் பொய்க் கதை களிலும் பொய்த் தெய்வ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர் களாய், அதனாற் றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழி வகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித், தம்முட் பகைமையும் பொறாமையுங் கொண்டு, நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போகின்றனர்! எனவே, இம் மக்கட்பிறவியைத் தெய்வப்பிறவி யாக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்கு வது, து, கால ஆராய்ச்சியால் உரங் கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சிமுறை இத் தமிழ்நாட்டகத்திலுள்ள அறிஞரெவராலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு, நந் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலினும் இது து காறும் விரிவாகக் காட்டப்படாமையின், மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்கவாசகர் காலம் எம்மால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று.

புதிது புகுந்த தமிழ்ச்சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களிற் றோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன் நூல்களி லின்றிப் பின் நூல் களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராண கதைகளாலும், முற்பிற் காலங்களிற் பொருள் வேறுபட்ட சொற்களாலுஞ் சமயக் கோட்பாடுகளாலுங், காலங்கடோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர் நூலிலுள்ள சொற்பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும் கைகளாலும், முன்னிருந்தோரைப் முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந்நூல்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகை களாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயின வற்றிற் புலனாம். அரசரின் காலக்குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல்நாட்டவர் வரைந்துவைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியரைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/70&oldid=1587516" இலிருந்து மீள்விக்கப்பட்டது