உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

கோற்றேன் மொழிக்கிள்ளாய், கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகராய் -ஏற்றார்

அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்

கழுக்கடைக்காண் கைக்கொள் படை

101

(திருத்தசாங்கம், 7)

என்னுந் திருவாசகந் திருப்பாட்டினால் உணர்த்தப்பட்டமை

காண்க.

இனி, எல்லாத்

துன்பங்களும்

பிறத்தற்கிடமான

ஆணவமலத்தின் குறும்புக்கு அடையாளமாவது புலியே யாகலின், அம்மலத்தின் செயலை ஒடுக்கிநிற்கும் இறைவனது நிலையே, புலித்தோலை யுரித்து உடுத்திருக்கும் நிலையாக வைத்து உருவகப்படுத்தப்பட்டது. இங்ஙனமே இறைவன் றிருமேனிமிசை யடையாளங்களாக மொழியப் படுவன வெல்லாம் அரும்பெரு நுண்பொருள்களை உள்ளடக்கிய உருவக வமைப்புக்களே யாகும்; அவை வ யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். இதுகாறுங் காட்டியளவே ஈண்டைக்குப் போதுமாகலின், இவற்றை இத்துணையின் நிறுத்தி மேற்செல்வாம்.

இறைவன் றிருவுருவ அடையாளங்களாக வைத்து மேலே காட்டியவாறு உருவகஞ்செய்து, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளை ஓர் உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடும் முறை, எத்தனையோ ஆயிர மாண்டுகளுக்கு முற்றொட்டே நிகழ்ந்து வருவதொன்றாம். இறைவனைச் சிவந்த நிறனுடைய 'சேயோன்' ஆகவும்,நீலநிறனுடைய ‘மாயோன்' ஆகவுங்கொண்டு வழிபடுந் திருவுருவ வணக்கம்.

மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும்

என்னுந் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்திலேயே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. 'பஃறுளியாறு’ கடல் கொள்ளப்படுமுன் அவ் யாறு பாய்ந்த பெருநிலப் பரப்பை அரசாண்ட பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் சிவபிரான் திருக்கோயிலை வலம்வந்து பணியும்

இயல்பினனென்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/110&oldid=1590731" இலிருந்து மீள்விக்கப்பட்டது