உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

  • மறைமலையம் - 24

பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே

(புறநானூறு, 6)

என்று அவனுடனிருந்த காரிகிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய பாட்டான் நன்குபுலனாகின்றது. இப்பாண்டி மன்னன் அவையிலிருந்த மற்றொரு நல்லிசைப் புலவரான நெட்டிமையார் என்பார் இவனை வாழ்த்துகின்றுழி,

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே

(புறநானூறு, 9)

டு

என்பதனாற் பஃறுளியாற்று மணலினும் பல ஆண்டு வாழ்கவென அவனை வாழ்த்துதல் கொண்டு, முதுகுடுமி எனும் அப்பாண்டிவேந்தனும், அவனது அவைக்களத்துப் புலவர்களான 'காரிகிழார்', 'நெட்டிமையார்' முதலியோரும் பஃறுளியாறு கடல்கொள்ளப்படும் முன் அஃதாவது இற்றைக்கு ஐயாயிம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தோராதல் நன்கு துணியப்படும்.

என்னு

இனி, தொல்காப்பியம் ஆக்கப்பட்ட காலத்தில் முத்தீ வழிபாடும், அம் முத்தீக்கண்ணும் முனைத்து விளங்கும் இறைவன் சிவந்த மேனியனாய்ச் 'சேயோன்' என நிற்பனென்னுங் கோட்பாடும் மிக்கு வழங்கினவாயினும், 'சிவன்' என்னும் பெயராதலால், 'முக்கண்ணன்’ பெயராலாதல் இறைவனை வணங்கும் வணக்கம் அஞ்ஞான்று உளதாயிற்றில்லை. 'முக்கண்ணன்’ ‘சிவன்' என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்தில் ஓரிடத்தாயினுங் காணப்படவில்லை. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட காரிகிழாரது செய்யுளிற் காணப்படும் 'முக்கண்ணன்' என்னுஞ் சொல் தொல்காப்பியத்திற் காணப்படாமையை உற்று நோக்குங்கால், தொல்காப்பியங் காரிகிழாரது காலத்திற்கும் பன்னூற்றாண்டு முற்பட்டு இயற்றப்பட்டதென்பது தெளியப் படும். படவே, தொல்காப்பியனார் காலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்கள் முருகக்கடவுளும், அக்கடவுள் முனைத்து விளங்கும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முத்தீயும், மாயோனுமேயாம்.

இனி, இருக்குவேதத்தில் உருத்திரக் கடவுண்மேற்பாடப் பட்ட பாக்களையும், ஏனைச் சிறுதெய்வங்கண்மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/111&oldid=1590732" இலிருந்து மீள்விக்கப்பட்டது