உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

103

நோக்குங்கால்,

பாடப்பட்ட பாக்களையும் ஒப்பிட்டு ஏனையோரைப் பாடிய பாக்களினும், உருத்திரன்மேற் பாடியவை மிகச் சிலவாதல் ஆராய்ச்சிவல்லார்க் கெல்லாம் எளிதின் விளங்குவதேயாம். அச் சிலவற்றுள்ளும் 'உருத்திரன்' என்னும் பெயரன்றி, 'முக்கண்ணன்' எனும் பெயர் காணப் படுகின்றிலது. இருக்குவேதப் பத்து மண்டிலங்களுள், ஏனை ஒன்பது மண்டிலங்களைவிடக் காலத்தாற் பிற்பட்டதாகிய பத்தாம் மண்டிலந் தொண்ணூற்றிரண்டாம் பதிகம் ஒன்பதாஞ் செய்யுளில்மட்டும் "ஏபி:சிவ" எனச் 'சிவன்' எனும்பெயர் காணப்படுகின்றது. சுக்கில எசுர் வேதத்தின் கண்ணதான 'சதருத்ரியத்'தில் உருத்திரன், சிவன், சர்வன், பவன், சங்கரன், பசுபதி, ஈசானன் முதலான சிவபிரான் பெயர்களெல்லாம் ஒருங்கே காணப்படினும், முக்கண்ணன்' என்னும் பெயர்மட்டும் ஆண்டுங் காணப்படுகின்றிலது. 'த்ரையம்பகன்' எனும் ஒருசொற் காணப்படினும், அஃது ‘அம்பிகையாகிய அம்மையோடு கூடினவன்' எனப் பொருள் செய்யப்படுகின்ற தல்லாமல், முக்கண்ணன் எனப் பொருள் செய்யப்படு கின்றிலது. இருக்கு, எசுர் முதலான வேதங்கள் எங்கணும் ‘ஆயிரங்கண்களுடையவன் சிவபிரான்' என்பது சொல்லப் படுகின்றதேயல்லாமல் என்பது ஓரிடத்தாயினுஞ் சொல்லப்படவில்லை. பண்டைத் தென்றமிழ் மக்களின் கோட்பாடுகளைப் பெரிதுந் தழுவி எழுதிய திகாசங்கள், புராணங்கள், உபநிடதங்கள் முதலாயின் ஈண்டைக்கு மேற்கோள்கள் ஆகா. மிகப் பழைய தமிழ்நூல் வடநூல்களை நன்காய்ந்து காணுங்கால், எல்லாம்வல்ல இறைவற்கு, ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் முக்கண்களாக அமைத்துச், சிவந்தொளிரும் உலகுருவினையே அவற்கு ஒரு திருமேனியாகக் கற்பித்து அவனை வணங்கும் வணக்கம் பண்டைத் தமிழ்மக்கட்கு மட்டுமே உரித்தாதல் இனிது விளங்காநிற்கும்.

‘முக்கண்ணன்’

இன்னும், இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்நூல்கள் தமிழ்ப்பாட்டுக்களிலாதல் வடநூல்கள் வடமொழிப் பாட்டுக்களிலாதல், கடவுளை நான்முகன் திருமால் சிவபிரான் என முத்திறப்படுத்து ‘மும்மூர்த்தி’ என்றோதி, அம்மூவருட் சிவபிரானும் ஒருவன் என்னும் பொருந்தாக் கோட்பாடு ஒரு சிறிதாயினுங் காணப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/112&oldid=1590733" இலிருந்து மீள்விக்கப்பட்டது