உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் - 24

படாமையும், அவற்றின்கண்ணெல்லாஞ் சிவபிரான் பிறப்பு இறப்பு இல்லா எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகவே வைத்து மொழியப்படுதலும் பெரிதும் நினைவிற் பதிக்கற் பாலனவாகும்.

66

6

இனி, உருத்திரப்பெருமான் சிவந்த நிறத்தினனாய்த் திகழ்தலோடு, சென்னியிற் செக்கர்ச்சடைகளும் உடையனா யிருக்கின்றன னென்பது இருக்குவேதத்திற் பலகாலும் நுவலப்பட்டிருக்கின்றது. இதற்கு, அதன் முதன் மண்டிலத்தில் இமா :ருத்ராய தவஸே கபர்திநே க்ஷயத்வீராய” என்று தொடங்கும் 114 ஆம் பதிகமே சான்றாம். இதன்கட் போந்த ‘கபர்திந்' என்னுஞ்சொற் 'சடையன்' என்னும் பொருட்டு. இதுவும், இதனோடொத்த இருக்குவேதப் பதிகங்கள் ஏனையவும் நாலாயிரத்து நானூறாண்டுகட்கு முன்னரே

இயற்றப்பட்டனவாகும்.

27

இன்னுங், கிறித்து சமயத்தவர்க்குரிய முதலாகமத்தில் இறைவன் ஆபிரகாமுக்கு எதிரே தோன்றி அருள் செய்தக்கால் தன் பெயர் எல்சடை என மொழிந்தான் என்பது சொல்லப் பட்டிருக்கின்றது. மேலும், 'எல்' என்னும் அடைமொழியின்றிச் ‘சடை’ என்னும் பெயரே இறைவற் குரிய இயற்பெயராக 'ஜாப்’ என்னும் ஆகமத்தில் முப்பத்தொருமுறை காணப்படுகின்றது. இச் ‘சடை' என்னுஞ்சொல் தமிழ்ச்சொல்லாதல் அறியாத ஈபுருமொழிப் புலவர், இதன் பிறப்பும் பொருளுந் தெரியாமையிற் பெரிதும் இடர்ப்பட்டு மயங்குவாராயினர். ஆபிரகாம்' முதலான பண்டைநாயன்மார்கள் தமிழரே யென்பது ஆராய்ச்சியிற் புலனாதலின், அவர் தமக்குத் தோன்றிய இறைவன் தன் பெயரைச் ‘சடையன்' எனத் தமிழ்மொழியில் அருளிச் செய்தது சாலப் பொருந்துவதேயாம் என்க.

இனி, இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்குமுன் 'செவ்வேள்' மேற்பாடப்பட்ட ‘குன்றம் பூதனாரது' பரிபாடற் செய்யுளிற், சிவபிரான் தன் சடைக் கற்றையிற் கங்கை நீரைத் தாங்கிநிற்கும் இயல்பு,

எரிமலர்த் தாமரை இறைவீழ்த்த பெருவாரி விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/113&oldid=1590734" இலிருந்து மீள்விக்கப்பட்டது