உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ

6

105

என்று தெளிவாகக் கூறப்பட்டிருத்தல் காண்க. திருமாலின் திருவடிகளினின்றும் இறங்கிய கங்கை நீரைச் சிவபிரான் தனது சடைக்கண் ஏற்றான்' எனப் பிற்காலத்து வைணவர் முழுமுதற் கடவுளை இழித்துரைப்பான் வேண்டிக் கட்டிவிட்ட பொய்க்கதை பழைய தமிழ்நூல் வடநூல்களிற் சிறிதுங் காணப்படாமையும் ஈண்டுநினைவிற் பதிக்கற்பாற்று.

இனி, இறைவன் திருமுடிமேற் பிறையமர்ந்து விளங்குந் தோற்றம், இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறாண்டுகட்கு முன்

பாடப்பட்டனவாகிய.

ஓங்குமலைப் பெருவிறற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறை பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற் றொருவன்

(புறம், 55)

(புறம், 91)

நுதலது இமையா நாட்டம் இகலட்டுக்

கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டுஅத் தோலா தோற்கே, ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே,

செவ்வான் அன்ன மேனி, அவ்வான்

இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை

முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி

மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய

யாழ்கெழு மணிமிடற் றந்தணன்

தாவில் தாள்நிழற் றவிர்ந்தன்றால் உலகே

(அகம், 1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/114&oldid=1590735" இலிருந்து மீள்விக்கப்பட்டது