உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் - 24

என்றற் றொடக்கத்துப் பழந்தமிழ்ச் செய்யுட்களிற் றெளித்துரைக்கப்பட் டிருத்தல் காண்க. ஏனைத் திருவுருவ யாளங்களும் இவ் வ் வகநானூற்றுச் செய்யுட்கண் ஓவியத்தெழுதிக் காட்டினாற்போல் அத்துணை எழில்பெறக் கூறப்பட்டிருத்தலும் வியக்கற்பாலதொன்றாம்.

வடை

இவ்வாறாக ஒளியொடுகூடி விளங்கும் உலகத் தோற்றத்தினையே உருவக வகையால் இறைவன்றன் திருவுருவமாக வைத்து வழிபட்ட பண்டைத் தமிழ்ச் சான் றோரில், அந்தணர் என்பார் வேறு முயற்சியிற் புகுதலின்றி, இறைவற்கு வழிபாடு ஆற்றுதலினும், இறைவன் நூல் ஓதுதலினுமே கருத்து ஒருப்பட்டு நின்றனராகலின்,

அவரெல்லாம் அவ் விறைவன் றிருவுருவத்தோடு ஒத்த தவவடிவமே தமக்கும் உரியதாகக் கொண்டிருப்பாராயினர் அரசரைச் சார்ந்தார் பெரும்பான்மையும் அவ் வரசரோ டொத்த கோலத்தினையும், முனிவரைச் சார்ந்தார் பெரும் பான்மையும் அம் முனிவரோடொத்த கோலத்தினையும், ஏனைப் பல்வகை நிலையின் நிற்பாரைச் சார்ந்தார் பெரும் பான்மையும் அவ்வந் நிலையினர்க்குரிய கோலத்தினையுந் தாந் தாம் மேற்கொள்ளுதல் இயல்பாதல்போல, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைச் சார்ந்தாரும் பெரும்பான்மையும் அக் கடவுட்குரிய திருக்கோலத்தினைத் தாமும் மேற்கொண்டு ஒழுகுதலும் இயல்பாயிற்றென்பது. எனவே, இறைவன் பொன் தோன்ற ஒளிவடிவினனாதல் பற்றி அவன் வழியில் நிற்பாரான அருந்தவத்தோர் தாமுந் தழல்வடிவினதாகிய காவியாடை உடுப்பாராயினர். தழல்தான் பற்றிய பொருளைத் தூய சாம்பராக்கி அச் சாம்பரைத் தன்மேற் பூக்க அணிந்திருக்கும் இயல்பே இறைவன்றன் திருமேனிமிசைத் திமிர்ந்திருக்குந் திருநீற்றின் உண்மையாதல் கண்டு, அவனை வழிபடுஞ் சான்றோருந் தந்திருமேனி மேலுந் திருநீறு பூசாநிற்பர். இறைவன் தனது நெற்றிமேற் கண்ணொடு முக்கண்ணனாய் விளங்குதலோடு ஒப்பவே, சான்றோருந் தமது நெற்றிமிசைச் சாந்தினாற் பொட்டிட்டிருப்பர். இறைவன் தன் திருமுடிமேற் சடைக்கற்றை உடையனாய் இருத்தல் போலவே, அருந்தமிழ்த் தாபதருந் தஞ்சென்னிமேற் சடைமுடியுடைய ராயிருப்பர். இறைவன் தன் சடைக்கற்றைமிசைச் சுமந்திருக்குங் கங்கைநீர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/115&oldid=1590736" இலிருந்து மீள்விக்கப்பட்டது