உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

107

அடையாளமாகவே, தமிழ்த் தாபதருந் தம் கையில் தண்ணீர்க் குடுவை ஏந்தியிருப்பர். இறைவனைப்போல் தண்ணீரைத் தாம் தலைமிசைத் தாங்குதல் ஆகாமையின், அருந்தவத்தோர் அதனைத் தலையிலன்றிக் கையின்கட் டாங்குவாராயின ரென்று உணர்ந்துகொள்க. இன்னும், மும்மலங்களைச் செகுக்கும் இறைவனது பேராற்றலே அவன் தன் கையில் ஏந்திநிற்கும் முத்தலை வேலாகச் சொல்லப்படுதலின், அவனது திருக் கோலத்தைத் தாங்கிய தாபதரும் 'முக்கோல்' ஏந்தியிருப்பர்; இதுபற்றியே இவர் 'முக்கோற் பகவர்”எனவும் மொழியப்படுவர்28. இன்னும், ஆணவமலத்தின் வலியை யொடுக்கிய இறைவனது நிலையே, அவன் புலித்தோலை உடுத்தியிருக்கும் இருப்பாதலின், அவன்வழிச் சார்ந்த தாபதர் தாமும் புலித்தோலை மேற்கொண்டிருப்பர்; இனி, ‘மான்’ என்னுஞ்சொல் தமிழில் மான் என்னும் விலங்கினையும், வடமொழியிற் 'பிரகிருதிமாயை’யினையுங் குறிப்பதொன் றாகலின்” மாயையை யொடுக்கிநிற்கும் நிலைக்கு அடையாள மாக மான்றோலை இருக்கையாய்க் கொண்டும் இருப்ப ரென்க. இன்னும் எல்லா நூற்கல்விக்கும் இறைவனே தலைவன் என்பதற்கு அறிகுறியாக அவன் தனது வலக்கையிற் சுவடியொன்றேந்தி அமர்ந்திருத்தல் போல, அவன் வழிப்பட்ட தாபதருந் தமது கையில் நூல் ஒன்றேந்தியிருப்ப ரென்க. இவ்வாறாக இறைவனோடொத்த வடிவுகொள்ளுந் தமிழந்தணரின் தவவடிவ அடையாளங் களிற் சில, ஆசிரியர் தொல்காப்பியனரால்,

என்று

நூலே கரகம் முக்கோலை மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய

ஓதப்பட்டமை

காண்க.

ச் சூத்திரத்தின்கட் சொல்லப்பட்ட‘நூல்' என்பது 'கலைநூலே'யல்லாமற் பூணூால் அன்று. தொல்காப்பியனார் நூல் எழுதிய பண்டைக்காலத்திற் புரிநூல் பூணும் வழக்கம் உண்டென்பதை நாட்டுதற்குச் சான்று இன்மையானும், துறவொழுக்கத்தின் நிற்பார்க்குப் பூணூல் இன்மை வடநூலார்க்கும் உடம்பாடகலானும்,30 இதற்குப் பூணுால் என்று உரைகூறிய உரைகூறிய பிற்காலத் பிற்காலத் துரைகாரரான 'பேராசிரியர்' கூற்றுப் பொருந்தாமை கண்டுகொள்க. 'கரகம்' என்பது நீர்க்குடுவை. 'முக்கோல்' இறைவனேந்திய முத்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/116&oldid=1590737" இலிருந்து மீள்விக்கப்பட்டது