உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் - 24

வேலுக்கு அடையாளம். 'மணை’ இருத்தற்கு இடும் புலித்தோல் மான்றோல் முதலியன. இன்னுந் தவவொழுக்கம் மேற்கொண்ட அந்தணர் தலைமிசைச் சடைமுடியுடையரா யிருப்பரென்பது,

கடுந்தெறற் செந்தீ வேட்டுப்

புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே

(251)

என்னும் பழைய புறநானூற்றுச் செய்யுளால் இனிது விளங்கா நிற்கும். இன்னும் அவர் காவியாடை பூண்டு முக்கோல் கைக்கொண்டு தவவொழுக்கத்தின் நிற்றல்,

கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான், முக்கோல் அசைநிலை கடுப்ப

என்னும் பழைய முல்லைப்பாட்டு அடிகளாற் புலனா கின்றது. இன்னும் அவர் மேற்கூறிய தவ அடையாளங் களோடு, தந் திருமேனிமேல் திருநீறும் பூசியிருப்பரென்பது,

என்று

சுத்திய பொக்கணத்து என்பணி கட்டங்கஞ் சூழ்சடை வெண்

பொத்திய கோலத்தினீர்

திருச்சிற்றம்பலக்

(242)

கோவையாரில்

மாவிரதியர்

தண்டமிழ்

விளிக்கப்படுமாற்றால் அறியப்படும்.

இங்ஙனமாகப் பண்டைக்காலத்துத்

நாட்டிலிருந்த தாபதரெல்லாரும்,எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை ‘முருகன்’

‘சிவன்” என்னும் பெயர்களால் முத்தீக்கண் வணங்கி, அம் முழுமுதற் கடவுளுக்குத் தாம் உருவக வகையாற் கற்பித்த வடிவத்தையே தாமும் பூண்டு, தவவொழுக்கத்தின் கண்ணராய் ஆங்காங்கு வைகினமையே பழைய செந்தமிழ் நூல்களான் அறியக்கிடக்கின்றது. இவ்வாறொழுகிய அருந்தவத்தோரின் வடிவமும், அவர் தந் தவவொழுக்கமும், அவ்வொழுக்கத்தின் பாலதான நோன்பும், பார்ப்பனரின் துறவொழுக்கமுமே ‘படிமை' ‘படிவம்' என்னுஞ் சொற்களால் உணர்த்தப்பட்டன என்பதை மேலே 654, 656 ஆம் பக்கங்களிற் பழையநூல் மேற்கோள்கள் பல கொண்டு நன்கு விளக்கிக்காட்டினேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/117&oldid=1590738" இலிருந்து மீள்விக்கப்பட்டது