உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

109

தொல்காப்பியம் முதலாக வந்த பண்டைத் தமிழ்நூல்களில் ஓரிடத்தானும் 'படிமை' 'படிவம்’ என்னுஞ் சொற்கள், 'படிமைபடிவம் சமண்முனிவரின் தவவொழுக்கத்தினை உணர்த்துதற்கு மேற்கோள் கண்டிலம். கரிகாற்சோழன் காலத்திற்கு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின்கட் சமண்சமயமாதல் அதனைத் தழுவினோராதல்இருந்த ரென்பதற்கு ஏதொரு சான்றும் பழைய தமிழ்நூல்கள் தமிழ்ப்பாட்டுகளில் ஓர் எட்டுணையுங் காணப்படவில்லை.

உண்மை யிவ்வாறிருப்பத், தொல்காப்பியனாரைச் சமண்முனிவரென நாட்டப்புக்கவர் அவர் காலத்திற் சமண்மதந் தமிழ்நாட்டில் இருந்ததென்னுந் தமது கூற்றை மெய்ச்சான்று ஒன்றுதானுங் காட்டி நிறுவாமல் அவரைச் சமணரெனக் கூறப்புக்கது,பழந்தமிழ் நூலாராய்ச்சி யுடையாரால் நகையாடி எள்ளப்படுதற்கே இடனாயது காண்க. மேலும் அவர் 'படிமை' என்னுஞ் சொல்லுக்குத் 'தவவொழுக்கம்' என்னும் பொருள் உளதாதலைக் கண்டிலேம் எனவும், தாம் வினவிய வடமொழிப் புலவர் களுங்கூட அச்சொல்லும் பொருளும் இல்லையென்று தெளிந்தேம் எனவும் உரைப்பாராயினர்.

31

பழைய தமிழ்நூல்களை ஆராய்ந்துபாராமலே அவர் அங்ஙனந் துணிவுரை நிகழ்த்தியது இரங்கற்பாலதொன்றாம். “கூறினை பெருமநின் படிமை யானே”

என்னும் பதிற்றுப்பத்திலும்,

"தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே”

என்னுங் குறுந்தொகையிலும்,

66

“கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

என்னும் முல்லைப் பாட்டிலும் ‘படிமை' 'படிவம்’ என்னுஞ் சொற்கள் அந்தணரின் தவவொழுக்கத்தை உணர்த்துதல் முன்னரே எடுத்துக் காட்டினாம்.அச் சொற்கள் அங்ஙனம் அப் பொருள் உணர்த்தும் வழியெல்லாஞ் சைவசமயத் துறவி களையே உணர்த்தக் காண்டுமன்றிச், சமண் துறவிகளை ஒரு சிறிதாயினும் உணர்த்தக் காண்கிலேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/118&oldid=1590739" இலிருந்து மீள்விக்கப்பட்டது