உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் - 24

மேலுஞ், சமண் சமயத்தினர் முழுமுதற் கடவுள் ஒன்று உண்டென்னும் நம்பிக்கையுடையரல்லர்; அந்நம்பிக்கை யில்லாமையின், முத்தீவேட்டு வழிபடும் நீரரும். அல்லர்; அஃதில்லாமையின், தீ நிறத்ததாகிய காவியாடையும், தீயின் எச்சமாகிய தூய வெண்ணீறும் மேற்கொள்வாரும் அல்லர்; இறைவனின் திருவடையாளமாகிய சடை முடியுந்; தண்ணீர்க் குடுவையும், முக்கோலும் உடையாரும் அல்லர்; இப் பெற்றியினரான சமண் முனிவர் 'ஆசீவகரும்', 'நிகண்டரும்', 'முண்டசாவகரும்' என முத்திறப்படுவ ரென்பதூஉம், இவருள் ஆ சீவகராவார் ஆடை ஆடையின்றி முற்றும் அம்மணமாயும், நிகண்டர் இடுப்பில் ஒருசிறு துண்டு மட்டும் உடுப்பவராயும் முண்ட சாவகர் அரையில் ஒரு துண்டு உடுத்துத் தலையை மழித்துவிடுபவராயும் ருப்பரென்பதூஉம் அங்குத் தரநிகாயத்திற் குறிக்கப் பட்டிருக்கின்றன. இச் சமண்முனிவரும், இவரின் வேறான புத்த முனிவர்களும் கௌதம சாக்கியர் காலத்தில் இருந்தாற்போலவே, தலையிற் சடைமுடியுடையருங் கையில் முக்கோல் ஏந்தியவருமான பார்ப்பனத் துறவிகளும் அக்காலத்தில் வடநாட்டிலும் இருந்தனரென்பதூஉம் அவ் அங்குத்தர நிகாயத்திலேயே நுவலப்பட்டிருக்கின்றது.” எனவே, கௌதமசாக்கியர் இருந்த காலத்திலேயே அஃதாவது இற்றைக்கு இரண்டாயிரத்தைந் நூறு ஆண்டுகட்கு முன்னரேயே வடநாட்டிலுஞ் சிவவடிவம் பூண்ட பார்ப்பன முனிவர்கள் இருந்தமை பௌத்த சமய நூல்களினாலேயே புலனாகின்றதன்றோ? மற்றுத் தென்றமிழ் நாட்டிலோ அக்காலத்திற் பார்ப்பன முனிவரைத் தவிர, ஏனைச் சமண் பௌத்த முனிவர் இருந்திலர். ஆகவே, 'படிமை' என்னுஞ் சொற்றென்றமிழ் நாட்டிலிருந்த சைவ அந்தணரின் தவ ஒழுக்கத்தையுந் தவவடிவத்தையுஞ் சுட்டுதற்கே எழுந்ததன்றிச், சமண் முனிவரின் தவவொழுக்கத்தை உணர்த்துதற் கெழுந்ததன் றென்பது கடைப்பிடிக்க அதுவேயுமன்றி, வடநாட்டிலிருந்த சமண் முனிவரின் தவவொழுக்கத்தை உணர்த்துஞ் சொல்லாக அது சமண் சமய நூல்களிலாயினும் வழங்கப்பட்டுள்ளதோவென யாம் அந் நூல்களை ஆராய்ந்து பார்க்க, ஆண்டும் 'படிமா' என்னுஞ் சொல்லைக் கண்டிலேம். அச் சொல் சமண் முனிவரின் தவ வொழுக்கத்தையே குறிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/119&oldid=1590741" இலிருந்து மீள்விக்கப்பட்டது