உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3×

111

மென நாட்டப்புக் கவராதல், அதற்கு ஒரு மேற்கோளாயினுஞ் சமண் நூல்களிலிருந் தெடுத்துக் காட்டினரோ வென்றால், அதுதானும் இல்லை. 'படிமா' என்பது சமண் சமயச் சொல்லே என்பதற்கு ஏதொரு மேற்கோளும் பழைய சமண் நூல்களிலிருந் தெடுத்துக் காட்டாது, இப்போது சில ஆண்டுகளுக்குமுன் ஓர் ஆங்கில மாதர் எழுதிய ஓர் ஆங்கில நூலை நம்பி அச்சொல் சமண் சமயத்தவர்க்கே யுரித்தாதல் வேண்டுமெனத் தந் துணிபுரைத்தலினும்பிழைபாடாவது பிறிதில்லை; இப் பிழைபாட்டுரையைக் கொண்டு ஆசிரியர் தொல்காப்பிய னாரைச் சமண முனிவரென காட்டப் புகுவதினும் பேதைமையாவதும் பிறிதில்லை. ஆராய்ச்சி முறை இன்னதென்றறியாதார் தாமும் இன்னோரன்ன ஆராய்ச்சியிற் புகுதல் பெரிதும் ஏதமாமென்க.

ப்போது வழங்குஞ் சமண் நூல்களில் வடமொழி தென்மொழியில்இருப்பனவெல்லாம் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இயற்றப்பட்டன வாகுமென அவை தம்மை நன்காராய்ந்த ஐரோப்பிய ஆசிரியர்கள் கூறாநிற்கின்றனர்.33 இவ்வாறு பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சமண் நூல்களில் யாண்டோ அருகிப் ‘படிமை' என்னுஞ் சொல் சமண் முனிவரின் தவவொழுக்கத்தை யுணர்த்துதற்கு வழங்கப்பட்டிருக்கலாம். அது கொண்டு அச்சொல் சமண் சமயத்தவர்க்கே உரித்தென்றல் ஆராய்ச்சியுணர்வில்லார் கூற்றாம். கி.பி. ஆறாம் நூற்றாண் டிலிருந் தெழுதப்பட்ட சமண் நூல்கட்கு ஐந்நூறாண்டு முற்பட் அருந்தமிழ் நூல்களினும் பாட்டுகளினு மெல்லாம் அச்சொல் அந்தணரின் சைவ தவவொழுக்கத்தையே உணர்த்தக் காண்டலால், அது சைவ சமயத்தவர்க்கே உரித்தாவதன்றிச் சமண்மதத்தவர்க்கு உரித்தாதல் ஒருவாற்றானுஞ் செல்லாது. தமக்கு முன்னிருந்த சைவ அந்தணத் தாபதர்தந் தவவொழுக்கத்துக்கு வழங்கி வந்த அப் ‘படிமை’ யென்னுஞ் சொல்லையே பின்வந்த சமண் முனிவர் தமக்கும் உரியதாக ஒரோவிடத்துப் பயன்படுத்தினா ராகற்பாலார். வடநாட்டிற் கௌதம சாக்கியர் காலத்திருந்த புத்த சமண் சமயத்தவருங் கூடத், தங் காலத்திற்கு முன்னிருந்த சைவ அந்தணரின் தவவொழுக்கத் தையே முதலாக வைத்து, அதன்படி தமக்குரிய ஒழுகலாறுகளை வரையறுத்தமைப்பா ராயினரென,

வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/120&oldid=1590742" இலிருந்து மீள்விக்கப்பட்டது