உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

179

வை

என்னுஞ் செய்யுளும் அதனுரையும் அவர் தம்மால் வரையப்பட்டன ஆகா. ‘நயப்பு' என்பதற்கு நக்கீரனாருரைத்த உரைப்பொருளையே இச் செய்யுள் தன்கட்கொண்டு நிற்கின்றது. 'நயப்பு' இன்னதென விளக்கித் தாம் கூறிய உரைக்குப்பின் அவர் தம்மாற் காட்டப்பட்ட மேற்கோள் "கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பழைய 'குறுந்தொகைச் செய்யுள் ஒன்றேயாம். இக் குறுந்தொகைச் செய்யுட் பொருளே அடங்கிய மேலும் ஐந்து கலித்துறைச் செய்யுட்கள் வேண்டா கூறலாய்ப் பின்னும் ஈண்டுச் சேர்க்கப் பட்டிருத்தலை உற்றுநோக்குமிடத்து, வை யெல்லாமும், இவற்றுட் சிலவற்றிற்குப் போந்த வுரைகளும் நக்கீரனார் கண்ட வுரையுட்படுவன அல்லவென்பது நன்கு புலனாம். இங்ஙனமே, பிறரால் பிற்காலத்தே சேர்க்கப்பட்ட கலித்துறைச் செய்யுட்களைப் பற்றிய பிற உரைக்குறிப்புகள் சிற்சிலவும் அச் செய்யுட்களைச் சேர்த்தவர் தம்மாலே தாம் எழுதி உடன்சேர்க்கப்பட்டனவாதல் வேண்டுமென் றுணர்ந்து கொள்க. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது பின்னும் விரியும். வ்வளவில், ஆசிரியர் நக்கீரனார் இறையனாரகப் பொருளுக்குரைத்த ஒப்புயர் வில்லா விழுமிய உரையி னிடையிடையே பிறராற் பின்றைக்காலத்தே சேர்க்கப்பட்டவை: நக்கீரனாரது அவ் வுரைவந்த வரலாறு தெரிக்கும் உரைப்பகுதியும், இடை யிடையே மேற்கோள்களாக வேண்டா கூறலாய்க் காட்டப்பட்டிருக்குங் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அவ்வளவும், அக் கலித்துறைச் செய்யுட்கள் ஒரு சிலவற்றிற்கு எழுதப்பட்டிருக்கும் ஒரு சில உரைகளும் உரைக்குறிப்பு களுமே என்பது பிரித்தெடுத்துக் காட்டப்பட்டமையால், இச்சிறு பகுதிகள் ஒழிய ஏனை உரைப் பெரும்பகுதி முற்றும் அதனிடையே விராய பழைய சங்கச் செந்தமிழ்ச் செய்யுள் மேற்கோள்களும் ஆசிரியர் நக்கீரனார் வரைந்தனவேயா மென்பது கடைப்பிடிக்க.

இனிச், 'சேரன் செங்குட்டுவன்” நூலார், 'இறையனாரகப் பொருளுரையினிடையே சேர்க்கப்பட்டிருக்குங் கலித்துறைச் செய்யுட்களிற் போந்த ‘அரிகேசரி பராங்குசன்” என்பான் கி.பி. 770 லிருந்த 'ஜடில் பராந்தக " னுக்குத் தந்தையே யாவனென்றும், அவன்மேற் பாடப்பட்ட கலித்துறைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/188&oldid=1590814" இலிருந்து மீள்விக்கப்பட்டது