உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் - 24

செய்யுட்களை எடுத்துக்காட்டிய 'களவியலுரை' அவ்வாற்றாற் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே யாகுமென்றும், நக்கீரனார் செய்த அவ்வுரை வாய்ப்பாட மாகப் பத்துத் தலைமுறை சொல்லப்பட்டுவந்து பத்தாந் தலைமுறையாகிய கி.பி.எட்டாம் நூற்றாண்டிலே தான் எழுத்துருவடைந்தமையின் அப் பத்துத் தலைமுறைக்கும் முந்நூறாண்டு கூட்ட நக்கீரனார் இருந்தது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டேயாகல் வேண்டுமென்றுங் கூறிய கூற்றினைச் சிறிதாராய்வாம்.

செப்புப் பட்டையங்களிற் குறிப்பிடப்பட்ட ‘அரிகேசரி பராங்குசன்’ என்னும் பாண்டிமன்னன் குழும்பூரிலுஞ் சங்கரமங்கையிலும் பல்லவ அரசர்களை முறியடித்தவன் என்னுந் துணையே சொல்லப் பட்டிருக்கின்றது; மற்று 'இறையனாரகப் பொருளுரை’க் கலித்துறைச் செய்யுட்களிற் புகழ்ந்து பாடப்பட்ட 'அரிகேசரி பராங்குச நெடுமாறன்” என்னும் அவநிசூளாமணி பாண்டியனோ பாழி, விழிஞம், சங்கமங்கை, நெல்வேலி முதலான பத்தொன்பதூர்களிற் சேரனொருவனைச் சிதைத்தான் என்னுந் துணையே சொல்லப்பட்டிருக்கின்றது. செப்புப் பட்டையத்திற் கண்ட அரிகேசரி பாண்டியன் நெல்வேலியிற் போர் புரிந்து சேரனொருவனை வென்றானென அச் செப்புப் பட்டையங் களுள் ஒன்றாயினுங் குறிக்கக் காணேம்; பல்லவரை வென்ற செப்புப்பட்டையப் பாண்டி யனையுஞ், சேரனை வென்ற களவியலுரைக் கலித்துறைப் பாண்டியனையும் ஒருவராக நாட்டுதற்குச் சான்று ஒன்றுதானுங் காணப்படா தாகவும் அவ் விருவரையும் ஒருவரென அஞ்சாது கூறத் துணிந்த செங்குட்டுவன் நூலாரது துணிபை என்னென்பேம்! அற்றன்று, செப்புப் பட்டையத்திற் குறிக்கப்பட்ட ‘சங்கர மங்கை' என்னும் ஊரே களவியலுரைக் கலித்துறையிற் சங்கமங்கை எனக் கூறப்பட்டதென உரை யாமோவெனின், அவ்வாறுரைத் தற்குத்தான் சான்றென்னை? அரிகேசரி பாண்டியன் சங்கரமங்கையில் வென்றது பல்லவ அரசரையேயாம்; மற்று, அவநிசூளாமணி பாண்டியனோ சங்கமங்கையிலும் ஏனைப் பல போர்க்களங் களிலும் வென்றது ஒரு சேரமன்னனையேயாம்; களவியலுரைக் கலித்துறைச் செய்யுட்கள் 326இல் ஓரிடத்தாயினும் அவன் பல்லவரை ன் முறியடித்தானென்பதுஞ் சொல்லப்டவில்லை; அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/189&oldid=1590815" இலிருந்து மீள்விக்கப்பட்டது