உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

L

181

அக்

போர்புரிந்த, பத்தொன்பது ஊர்ப் போர்க்களங்களிற் 'குழும்பூர்' ஒன்றாதலுங் காணப்படவில்லை. ஆகவே, சங்கமரங்கை, குழும்பூர் என்னும்இடங்களிற் பல்லவரை முறியடித்த 'அரிகேசரி பராங்குச மாறவர்மனும்' பாழி, விழிஞம், சங்கமங்கை, நெல்வேலி முதலான பத்தொன்பதூர்ப் பறந்தலைகளிற் சேரமன்னன் ஒருவனைவென்ற ‘அவநி சூளாமணி நெடுமாறனும் வெவ்வேறு காலத்திருந்த வெவ்வேறு பாண்டி மன்னரே யாவரல்லது. அவ் விருவரும் ஒருவராகாமை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ளிதின் விளங்கற் பாலதாம். அல்லதூஉங் களவியலுரைக் கலித்துறைச் செய்யுட்களில் நுவலப்பட்ட பத்தொன்பதூர்ப்பெரும் போர்களில் ஓரிடத்தாயினும் பல்லவ அரசர் மொழியப் படாமையின், த்தென்னாட்டின்கட் பல்லவராட்சி நிலைபெறுதற்குமுன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே கலித்துறைச் செய்யுட்கள் மொழிகின்றன வென்பது திண்ணமாம். அக் கலித்துறைச் செய்யுட்கள் அத்தனையும் ஒரு பாண்டிவேந்தன் மேலனவாய்ப் பாடப்பட்டிருத்தலை உற்றுநோக்குவார் எவர்க்கும், அவை அவ்வரசனாற் புரக்கப்பட்ட ஒரு புலவரால் அவ் வேந்தன் காலத்திலேயே இயற்றப்பட்டனவாதல் வேண்டுமென்பது புலனாகாநிற்கும். கி.பி.எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்னும் ஒரு பாண்டியனும், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் நெல்வேலிக்கண் வில்வேலியை முறியடித்த அரிகேசரி மாறவர்மன் என்னும் ஒரு பாண்டியனும், கி.பி.ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியில் ‘அவநி சூளாமணி மாறவர்மன்” என்னும் ஒரு பாண்டியனும் ஆகப் பாண்டிமன்னர் மூவர் 'மாறன்' என்னும் பெயருடை யராய் அரசுபுரிந்தமை செப்புப் பட்டையங்களான் அறியக் கிடக்கின்றது. ‘மாறன்’, ‘அரிகேசரி”, ‘பராங்குசன்' என்னும் பெயர்கள் பாண்டிவேந்தர் பலர்க்குப் பொதுவாகக் காணப்படுதலால். அப் பெயர்களை மட்டுங் கொண்டு ன்னகாலத்திருந்தனர் எனத் துணிவது இழுக்குடைத்தாம். அவ்வம் மன்னர் செய்த ஆண்மைச் செயல் வரலாறுகளையும் பிறவற்றையுங், கருவியாகக் கொண்டு இவர் ன்னகாலத் திருந்தனரெனத் துணிவதே வாய்வதாகும்.

ன்னார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/190&oldid=1590816" இலிருந்து மீள்விக்கப்பட்டது