உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

  • மறைமலையம் - 24

மேற்காட்டிய பாண்டிவேந்தர் மூவரில் எவ்வெவர் காலத்திற் செந்தமிழ்ப் பயிற்சிமிக்கு நிகழ்ந்ததென்று ஆராயும்வழி. 'அவநி சூளாமணி மாறன்’றன் ஆட்சிக்காலத்திலும், அவன்மகன் 'செழியன் சேந்தன்' காலத்திலுமே அஃதவ்வாறு செழிப்புற்றுத் திகழ்ந்த தென்பது 'சூளாமணி' என்னுஞ் செந்தமிழ்க் காப்பியம் முன்னையோன் பெயரால் இயற்றப்பட்டு அவன் மகன் சேந்தனது அவைக்களத்தே அரங்கேற்றப் பட்டமையினை,

நாமாண் புரைக்குங் குறையென்னினும் நாம வென்வேற் றேமாண் அலங்கற் றருமால் நெடுஞ் சேந்த னென்னுந் தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பிற்

கோமான் அவையுள் தெருண்டார்கொளப் பட்ட தன்றே.'

5

என அக் காப்பியமே நன்கெடுத்துக் கூறுமாற்றால் இனிது விளங்கும். இவ் இருபாண்டி வேந்தர்க்குப்பின் அரசு செலுத்திய நின்றசீர் நெடுமாற பாண்டியன் காலத்தில் தமிழ் அங்ஙனஞ் சிறப்புற்றிருந்ததென்பது ஏதொரு நூற் சான்றானும் பெறப்படாமை யானும், அப் பின்னையோன் காலத்தில் அது சிறப்புற் றிருந்ததாயின் அவ்வாறு நூற்சான்று சிறிதும் இல்லையாய் ஒழியாதாகலானும் அப்பின்னையோன் காலத்திலெல்லாந் தமிழ்மொழிப் பயிற்சி குன்றிச், சமண் சைவ மதப் போராட்டமே எங்கும் ஆர்ப்பெடுத்துப் பரவலாயிற்றென்க; செழியன் சேந்தனுக்குப் பின்வந்த ‘நின்றசீர் நெடுமாற’ பாண் பாண்டியன் காலத்தில்திருஞானசம்பந்தப்பெருமானுக்குஞ்சமண்முனிவர்க்கும் இடைநிகழ்ந்த வழக்கே இதற்கு ஒருபெருஞ் சான்றாம். ஆகவே, நின்றசீர் நெடுமாற பாண்டியன் காலத்திற்குமுன் அரசுபுரிந்த 'செழியன் சேந்தன்' காலத்திலும், அவனுக்குத் தந்தையாகக் கருதப்படும் ‘அவநி சூளாமணி மாறன்' காலத்திலும் மட்டுமே தமிழ்மொழிப் பயிற்சி வளங்கெழுமி நின்றமை தமிழ்நூல்களாற் றெளியக் கிடத்தலின் இறை யனாரகப் பொருளுரைப் பயிற்சியும், அவநி சூளாமணி மாறன்மேற் பாடப்பட்ட கலித்துறைச் செய்யுட்கள் அவ்வுரையி னிடையிடையே செருகப் பட்டமையும் அவ் விருவருஞ் செங்கோலோச்சிய கி.பி.ஆறாம் நூற்றாண்டி னிடையிலேதான் நிகழ்ந்ததாகல் வேண்டுமே யல்லாமற் 'செங்குட்டுவன்' நூலார் கூறியபடி கி.பி.எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன ஆகா. இவ்வாற்றால் செப்புப் பட்டையங்களிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/191&oldid=1590817" இலிருந்து மீள்விக்கப்பட்டது