உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

183

குறிக்கப்பட்ட ‘சங்கரமங்கை’யுங், களவியலுரைக் கலித்துறைச் செய்யுட்களில் மொழியப் பட்ட ‘சங்க மங்கை' யும் எவ்வே றூர்களாகக் கொள்ளப் படல் வேண்டுமென்பதும், அங்ஙன மின்றி அவை யிரண்டும் ஒன்றேயென்று கொள்ளப்படினும் அதன்கண் நிகழ்ந்த போர்கள்இரண்டாய் ஒன்று அவநி சூளாமணி மாறனுக்கும் ஒரு சேர மன்னனுக்கும் இடை நிகழ்ந்ததேயாக, மற்றொன்று அரிகேசரி பராங்குச மாறனுக்கும் பல்லவ அரசர்க்கும் இடைநிகழ்ந்ததாய் வெவ்வேறு காலத்தன ஆகுமென்பதுந் தாமே போதரும் என்க.

இனி, நக்கீரனார் இயற்றிய களவியலுரை பத்துத் தலைமுறை வாய்ப்பாடமாக வந்து, பத்தாந்தலைமுறை யாகிய கி.பி.எட்டாம் நூற்றாண்டிலேதான் எழுத்துரு வெய்திற் றென்ற 'செங்குட்டுவன்’ நூலாரது கூற்றுப் பெரியதொரு பிழைபாடுடைத்தாம். வடக்கிருந்த ஆரிய மாந்தரே கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் தம்முடைய நூல்களை எழுத்திலிட்டு எழுதத் தெரியாதவர்களாய், அவற்றை வாய்ப்பாடமாகக் கிடைகூட்டி நெட்டுருப்பண்ணி இடர்ப் பட்டோ ராவர். மற்றுத், தமிழ்மக்களோ தொல்காப்பியனார் இருந்த ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமது மொழியையும் அம்மொழி நூல்களையும் எழுத்திலிட்டு எழுதத் தெரிந்த நாகரிக வாழ்க்கையினராய் இருந்தன ரென்பதையும், அவர் வழங்கிய எழுத்துக்கள் வட் வட்டெழுத்துக்களேயா மென்பதையும் மேலே 753 ஆம் பக்கத்திலிருந்து 759 ஆம் பக்கம் வரையில் வைத்து விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அங்ஙனம் எழுத்தெழுதத் தெரிந்த பண்டைத் தமிழறிஞர் தம்முடைய நூல்களையெல்லாம் பனையேடுகளில் எழுதி வைத்துப் பயின்று வந்தனரே யன்றி, வட வாரியரைப்போற் கிடைகூட்டிப் பயின்று அவை தம்மை முற்றும் உருச்செய்து, இடர்ப் பட்டாரல்லர். தமிழர்க்கும் ஆரியர்க்கும் பண்டேயுரிய இவ் விருவேறு நூற்பயிற்சி முறையினியல்பு, எழுத்தெழுதத் தெரிந்த இந் நாளிலும் அவ்வாரிய வழக்கத்தைப் பின்பற்றிய பார்ப்பனர் அதனை விடமாட்டாராய்க் கிடை கூட்டித் தம் நூல்களை நெட்டுருச் செய்து வருதலாலும், தமிழறிஞர் அவ்வாறின்றித் தமது பழைய வழக்கப்படியே தம் நூல்களை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/192&oldid=1590819" இலிருந்து மீள்விக்கப்பட்டது