உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

வ்

மறைமலையம் - 24

பனையேடுகளில் எழுத்திட்டெழுதிப் பயின்று வருதலானுந் தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றிக்,களவியலுரைப் பாயிரமே "இவ் வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத் தெழுதிப் பீடத்தின்கீழ் இட்டான் என மொழிதலால், றையனாரகப் பொருட்" சூத்திரமும் அவற்றினுரையும்

66

ஆக்கப்பட்ட பழைய நாளிலேயே தமிழ்நூல்கள் எழுத்திட் டெழுதப் பட்டமை ஐயுறவின்றித் துணியப்படும். படவே, களவியற் சூத்திரமும் உரையும் பத்துத் தலைமுறை வரையில் வாய்ப் பாடமாகவே வந்ததென்று பண்டைநூற் சான்றுகட் கெல்லாம் முரணாகத் துணிபுரை நிகழ்த்திய ‘சேரன் செங்குட்டுவன்' நூலாரதுகோள் புரைபட் டழிந்தமை காண்க. அற்றேல், நக்கீரனார் தாமெழுதிய அக் களவிய லுரையைத் “தம் மகனார் கீரவிகொற்றனார்க் குரைத்தார்; அவர் தேனூர் கிழார்க் குரைத்தார்; அவர் படியங்கொற்றனார்க் குரைத்தார்” என்றற்றொடக்கத்தனவாகப் போந்த சொற்றொடர்க்கருத் தென்னையெனின்; இக் காலத்திற் பல்லாயிரக்கணக்கான நூல்களை அச்சிற் பதித்துத் பரப்புவிக்கும் அச்சுப் பொறிகளும் அச்செழுத்துக்களுந் தாள்களும் உளவாயினாற் போல, அக்காலத்து அக்கருவிகள் இன்மையின், அஞ்ஞான் றிருந்த நல்லிசைப் புலவ ரொருவர் தாம் இயற்றிய நூலைத் தாம் எழுதியவாறே பிழைபடாமல் வழங்குவித்தற்பொருட்டுத், தாம் அறிந்த கற்றார் ஒருவர்க்கு அந் நூலைப் பாடஞ்சொல்லி வைத்து அந்நூற் பொருளைப் பிறர் தமக்குத் தோன்றியவாறு திரித்துணர்ந்து அத் திரிபுணர்ச்சிக்கு இசைய அதன்கண் உள்ள சொற்களையுஞ் சொற்றொடர் களையும் மாற்றிப் பிழைபடுத்தா வண்ணந், தமதுண்மைக் கருத்துத் தெரித்துரைப்பர். அவ்வாறு அந் நூலாசிரியன் வாய் அந்நூலின் மெய்ப் பொருளுணர்ந்தவர், அதனைத் தாம் கேட்டுணர்ந்தவாறே தாம் அறிந்த மற்றொருவர்க்கோ அல்லது பலர்க்கோ அதனைப் பாடஞ் சொல்லி வைப்பர். இங்ஙனமாக ஓராசிரியன் இயற்றிய நூல் அவன் கருத்தை வழுப்படாமல் அறிவிக்குங் கருவியாய் அவன் வழிவந்த மாணாக்கருள் ஒருவர் ஒருவர்க் குரைப்பவரும் வரிசையினையே “நக்கீரனார் தம்மகனார் கீரவிகொற்றனார்க் குரைத்தார்; அவர் தேனூர்க்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/193&oldid=1590820" இலிருந்து மீள்விக்கப்பட்டது