உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

185

கிழார்க் குரைத்தார்” என்றற்றொடக்கத்துச் சொற்றொடர்கள் அறிவுறுத்துவதன்றி, எழுத்தெழுதத் தெரியா ஆரிய மாந்தர் தம் நூல்களைத் தம்மவர்க்கு வாய்ப்பாடமாகச் சொல்லி வைத்தல்போல், நக்கீரனார் முதலியோருந் தத்தம் மாணாக்கர்க்கு அதனை வாய்ப்பாடமாய்ச் சொல்லி வைத்தாரென அறிவுறுத்துவன அல்ல. ஏனெனிற், பண்டே எழுத்தெழுதத் தெரிந்த தமிழர்க்குள் அங்ஙனம் வாய்ப்பாடமாகச் சொல்லிவைக்கும் வழக்கம் இல்லாமை யானும், அன்றி அவ் வழக்கம் இருந்ததென நாட்டுதற்கு ஏதொரு சான்றுங் காணப்படாமையானும் என்பது. அது கிடக்க.

டு

இனிக், களவியலுரை உரைக்கப்பட்டு வந்த மாணாக்கரின் காலவரிசைபத்தாந் தலைமுறைக்கண் நின்ற முசிறியாசிரியர் நீலகண்டனாரொடு முற்றுப் பெறுதலின், அவ்வுரை நீலகண்டனார் காலத்திலேதான் எழுத்துருப் பெற்று ஏட்டிலெழுதப்பட்ட தென்றும், அங்ஙனம் அஃது எழுதப்பட்ட காலம் அவ்வுரையி னிடையிடையே எடுத்துக் காட்டாய்ப் போந்த கலித்துறைச்செய்யுட்களிற் புகழப் பட்டவனுங் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தவனுமாகிய ‘அரிகேசரி பராங்குச மாறவர்மன்' காலத்திற்கும் பிற்பட்டதே யாகற்பாலதென்றுஞ் 'செங்குட்டுவன்' நூலார் கூறினர்.பத்தாந் தலைமுறைக்கண் வந்த நீலகண்டனாரொடு நக்கீரனாருரையின் வழிவந்த மாணாக்கர் மரபு முற்றுப் பெறுதலால், அம் மாணாக்கர் வரிசையினைக் கூறும் உரைப்பகுதி மட்டும் நீலகண்டனார் எழுதியதாயிருக்கலாம். ஆனால் நீலகண்டனார் காலத்திலே தான் அவ்வுரை எழுத்துருப் பெற்ற தென்பதற்குச் சான்றென்னை? தொல்காப்பியனார் காலந்தொட்டே தமிழ் நாட்டகத்துத் திகழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் தம்முடை நூல்களை எழுத்திட் டெழுதப் பயின்று வந்தார்களென்ப தற்கே நூற்சான்றுகள் இருக்கக் காண்டுமன்றி, அவர்கள் அவற்றை வாய்ப்பாடமாக ஓதிவந்தார்களென்பதற்குத் தினைத் தனைச் சான்றும் இன்மையின், நீலகண்ட ன்மையின், நீலகண்டனார் காலத்திலே தான் அவ்வுரை எழுத்துருப் பெற்றதெனப் பிழையாகப் பொருள் பண்ணிக்கொண்ட ‘சேரன் செங்குட்டுவன்” நூலாரது உரை பெரும்பிழை பாட்டுரையேயா மென்க.

ய ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/194&oldid=1590821" இலிருந்து மீள்விக்கப்பட்டது