உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

  • மறைமலையம் - 24

இனிக், களவியலுரையி னிடையிடையே செருகப் பட்டுள்ள கலித்துறைச் செய்யுட்களிற் புகழ்ந்துபாடப் பெற்றவன் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியிலிருந்த 'அவநிசூளாமணி மாறனே' யல்லாது, அவனுக்கு நான்கு தலைமுறை பிற்பட்டு வந்து கி.பி.எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த 'அரிகேசரி பராங்குச மாறவர்மன் அல்லவென்பதை மேலே நன்கு விளக்கிக் காட்டின மாதலால், அவ்வரசனைப் பின்னோனாக மாறுபடுத்திச் சொல்லிய செங்குட்டுவன் நூலாரதுரை பெரியதொரு தலைதடுமாற்ற வுரையேயாமென விடுக்க.

ச்

இனி, அப் பாண்டி மன்னன்மேற் பாடப்பட்டிருக்குங் கலித்துறைச் செய்யுட்களை அவ்வுரையினிடையிடையே சேர்த்தவர், நக்கீரனார்தம் மாணாக்கர் வழியில் வந்த நீலகண்டானரே யாவரென்பதுபடச் 'செங்குட்டுவன்' நூலார் மொழிந்ததற்குச் சான்று யாது என்றாராய்வுழிச் சான்றேதும் புலப்படக் காணேம். சான்றேதுமின்றித் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் எழுதிவிடுதல்தான் வரலாற்றுரை போலும்! மற்று, அக் கலித்துறைச் செய்யுட்கள் அவ் அவநிசூளாமணி மாறனது அவைக் களத்திருந்த ஒரு புலவராற் செய்து அவ்வுரையினிடையே சேர்க்கப் பட்டனவாதல் வேண்டுமே யல்லாமல், நக்கீரனார் தம் மாணாக்கர் வழிவந்த நீலகண்டனாராற் சேர்க்கப் பட்டன ஆகாவென்பது முன்னரே விளக்கப்பட்டது. ஆசிரியர் நக்கீரனார் கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தாரென்பதை மேலே சான்றுகள் காட்டி விளக்கியிருக்கின்றேம். ஆகவே, அவர் தம் மாணாக்கர் மரபிற் பத்தாந் தலைமுறைக் கண் நின்ற நீலகண்டனார் கி.பி. நான்காம் நூற்றாண்டின் நடுவிலிருந் தாராகற் பாலார். நக்கீரனார் கண்ட களவியலுரைப் பாயிரத்தினிடையே அவருரை வந்த வரலாறு தெரிக்கும் ரைப்பாயிரப்பகுதி இந் நீல கண்டனாரால் எழுதி அதன் கட் சேர்க்கப்பட்டதோ, அன்றி அந் அன்றி அந் நீலகண்டனார்க்கும் முற்போந்த மாணாக்கரால் எழுதிச் சேர்க்கப்பட்டதோ,

L

இன்னதுதானென்று துணிந்து சொல்லுதற்குச் சிறிதும் வாயிலில்லை. அஃதெங்ஙனமாயினும்,ஆரியர் நடையைப் பின்பற்றிய பார்ப்பனர் பொய்யும் புரட்டும் நிரம்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/195&oldid=1590822" இலிருந்து மீள்விக்கப்பட்டது