உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 *

187

கட்டிவிட்டபுராணகதைகள் தமிழ் நூல்களில் மெல்ல மெல்லப் புகத்தொடங்கிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் அப் புராணக்கதைகளோ டொத்த புளுகுகள் பல விரவிய அவ்வுரைப் பாயிரப் பகுதி எழுதி அதன்கண் நுழைக்கப்பட்டதாகல் வேண்டு மென்பதுமட்டுந் திண்ணம். னைக் கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் முந்நூற் றிருபத்தொன்பதும், அவற்றுட் சிலவற்றிற்குப் போந்த உரைகளும் உரைக் குறிப்புகளுமோ நீலகண்டனார்க்கு இரு ரு நூறாண்டு பிற்பட்டுவந்த ‘அவநிசூளாமணி மாறன்’றன் அவைக் களத்துப் புலவரொருவரால் இயற்றி அவ்வுரையின்கட் சேர்க்கப்பட்டனவாதல் வேண்டுமென்று பகுத்துணர்ந்து கொள்க. இவ்வாறாக, அக் கலித்துறைச் செய்யுட்களை அவ்வுரையின்கட் கோத்தவர் நீலகண்டனார் அல்ல ரென்பது பெறப்படவே, கி.பி. நான்காம் நூற்றாண்டின் கண்ணதான அவரது காலத்தைக் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் கண்ணதாகச் சான்றேதுமின்றிப் பிழைத்துணர்ந்து, அவ்வாற்றால், ஆசிரியர் நக்கீரனாரைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்க விழைந்த 'சேரன் செங்குட்டுவன்' நூலாரது விழைவு நிரம்பாது ஏமாற்றம் அடைந்தமை காண்க. நக்கீரனார் இருந்த காலங் கி..பி. ஐந்தாம் நூற்றாண்டாகாமல் முதல் நூற்றாண்டாகவே பலவாற்றானுந் திண்ணமாய்ப் பெறப்படுதலால், அவரும் அவரோடொரு கிருந்த தமிழ்ச் சான்றோரும் நடை பெறுத்திய கடைச்சங்க மிருந்த க காலமுங் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாகாமற் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகவே பெறப்படும்

என்பது.

அடிக்குறிப்புகள்

1.

செந்தமிழ், ஏழாந்தொகுதி, மூன்றாம்பகுதி, 128 ஆம் பக்கம்.

2.

3.

See P. Arunchalam's Sketches of Ceylon History. pp. 8, 9.

4.

Introduction to Jaina Suras by Dr. Hermann Jacobi Vol. I. p.XIII.

Dr. S. Krishnaswami Aiyangar in his `The Beginnings of South Indian History', p. 267.

5.

சூளாமணி, பாயிரம், 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/196&oldid=1590823" இலிருந்து மீள்விக்கப்பட்டது