உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

25. கடைச்சங்க காலத் தொடர்ச்சி

L

னிச், 'சேரன்செங்குட்டுவன்" நூலார் மேற்காட்டிய வாறெல்லாம் பிழைபாடாகத் தாம் செய்துகொண்ட செய்யுட்பொருள்களாலும், உண்மைகளை மாறுபடுத்திக் கொண்ட மாறுபாட்டுரைகளாலும், ஒன்றை மற்றொன்றாகக் கருதிய திரிபுணர்ச்சியாலுங் கடைச்சங்க காலத்தைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுப்பிக்க முயன்று அம் முயற்சியில் முற்றும் இழுக்கியவாற்றினை விரித்து விளக்கிக், கடைச் சங்ககாலங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தாதலை நிறுவினாம். அவர் அம்மட்டிலமையாது, 'சிலப்பதி காரத்'திற் போந்த சில குறிப்புகளைப் பொறுக்கியெடுத்து அவற்றிற்குத் தம் மனம் போனவாறு பொருளுரைத்து அவ்வாற்றால் வடநாட்டு மன்னர் சிலரிருந்த காலவாராய்ச்சி யினைத் தம் கருத்துக்கிணங்கத் திரித்து அதுகொண்டு கடைச்சங்ககாலம் ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுமென்றார். ஆகலின், அதனையும் ஆராய்ந்து அவர் கொண்ட முடிபு பொருந்தாமை காட்டுதும்.

சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோ வடிகட்குத் தமையனும், பேராண்மையிற் சிறந்த சேர வேந்தனும் ஆகிய சங்குட்டுவன் கண்ணகியின் உருவஞ் சமைத்தற்கு இமயமலையினின்றும் ஒரு கருங்கற்றுண்டு காண்டு வருதற்பொருட்டுந், தென்றமிழ் மன்னரை இகழ்ந்து பேசிய வ ஆரிய மன்னராங் கனக விசயர் என்பாரை வென்றடக்குதற் பொருட்டும் வடநாடு நோக்கிப் படையெடுத்துச் சென்றா னென்பதும், அங்ஙனம் அவன் சென்ற காலத்து அவனுக்கு உதவிசெய்த நண்பரான ஆரிய மன்னர் ‘நூற்றுவர் கன்னர்' எனப்படுவ ரென்பதுஞ் சிலப்பதிகாரங், கால்கோட் காதையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/197&oldid=1590824" இலிருந்து மீள்விக்கப்பட்டது