உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

189

சொல்லப்பட்டிருக் கின்றன. வட ஆரியமன்னரில் நூற்றுவர் கன்னரே சேரன்செங்குட்டு வனுக்குச் சிறந்த நண்பரென்பது, வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த

நூற்றுவர் கன்னரும்

(கால்கோட் காதை, 148, 149)

எனப்போந்த அடிகளாலும், இவன் வடக்கே சென்று கங்கைப் பேரியாற்றைக் கடக்க வேண்டுழி அக் கங்கை யாற்றுப் பக்கத்திருந்த நாடுகளில் அரசுபுரிந்த அந்நூற்றுவர் கன்னர் அவனுக்கு மரக்கலன்கள் பலவற்றைக் கொடுத் துதவிசெய்து, அவற்றால் அவன் தன்படை யொடும் அவ்வியாற்றைக் கடந்து அதன் வடகரை சேர்ந்தவழி அவ் வாரியமன்னர் அவனை எதிர்கொண்டு தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றனரென்பது,

கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி, ஆங்கவர் எதிர்கொள அந்நாடு கழிந்து

(176, 178)

எனப்போந்த அடிகளாலும், அங்ஙனஞ்சென்ற செங்குட்டுவன் தன்னை எதிர்த்த கனகவிசயரையும் அவர்க்குத் துணைப்போந்த ஆரிய மன்னரையும் வென்று இமயத்தெடுத்த கருங்கற்றுண்டை அக் கனகவிசயர் முடிமேலேற்றித் தென்னாடு நோக்கிப் பெயர்கையில் தனக்கு உதவிசெய்த நண்பரான ‘அந் நூற்றுவர் கன்னரை, அவர் தம் நாடுநோக்கிச் செல்கவென ஏவினனென்பது, ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்

சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவி

(நீர்ப்படைக் காதை, 177, 178)

என்னும் அடிகளாலும், அதன்பின் தென்றமிழ்க் குடநாட்டிற்றன் வஞ்சிமாநகர்க்குத் திரும்பிய செங்குட்டுவன் தான் கொணர்ந்த கருங்கற் றுண்டிற் கண்ணகியின் உருவமைத்து அதற்கென்று கட்டுவித்த கோயிலில் அதனை நிறுத்தி விழாவெடுத்த ஞான்று, அவன் போரிற்றொலைத்துச் சிறையாய்க் கொணர்ந்த ஆரிய மன்னரையும் அவர்போல் முன்னரே சிறைக்கணிருந்த ஏனை மன்னரையுஞ் சிறையினின்றுஞ் சிறை வீடு செய்ய அம் மன்னருங், குடகநாட்டின் கொங்கரும், மாளுவநாட்டின் வேந்தரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/198&oldid=1590825" இலிருந்து மீள்விக்கப்பட்டது