உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் - 24

இலங்கைத்தீவின் வேந்தனான கயவாகுவும் வந்து அக்கண்ணகி யின் னுருவத்தை வணங்கினரென்பது,

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னருங் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தருங் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்ட

6

(வரந்தரு காதை, 157-163)

கூ

என்னும் அடிகளாலும், இவற்றையெல்லாம் உடனிருந்து கண்ட இளங்கோவடிகளே சிலப்பதிகாரத்தில் விளங்கக் கூறியிருக் கின்றார். இவர் கூறிய இவ் வுண்மை வரலாற்றுக் கங்கையாற்றின் வடகரையை யடுத்துள்ள நாடுகளில் அரசாண்ட ஆரிய மன்னராதலும், ஏனை ‘மாளுவ வேந்தர்' என்பார் கங்கை யாற்றுக்குத் தெற்கே நெடுந்தொலைவில் உளதாகிய நருமதை யாற்றங்கரையை யடுத்து ‘ராஜபுதனத்’தின் தென்பகுதிக்கண் விரிந்ததாகிய மாளுவ நாட்டை ஆண்டோராதலும், இவ் விருவேறு அரசரும் வெவ்வேறு நாட்டினரும் வெவ்வேறு இனத்தினரு மாவரே யல்லது இவ்விருவரும் ஒருவரேயென ஒன்று படுத்துரைத்தற்குத் தினைத்தனைச்சான்றும்

ளங்கோவடிகள் அருளிச்செய்த இவ்வரலாற் றுரைகளில் ல்லையாதலும் வை தம்மை ஆயுந் தமிழறிஞர் எவரும் நன்குணர்வர்.

ஈதிங்ஙனமாகவுஞ் 'செங்குட்டுவன்’ நூலார், இளங்கோ வடிகள் குறித்த 'மாளுவ வேந்தரும்' 'நூற்றுவர் கன்னரும்' வேறுவேறல்லர் ஒரு வகுப்பினரே யென்றுங், கி.பி. 350ஆம் ஆண்டிற் சமுத்திரகுப்தன் இம் மாளுவ நாட்டின்மேற் படையெடுத்துவந்த ஞான்று இம் மாளுவ வேந்தர் தமது மாளுவநாட்டைப் பல பிரிவுகளாகப் பகுத்து அவற்றின்கண் அரசுபுரிந்துவந்தன ரென்றுங், கண்ணகிகோயிலிற் செங்குட்டுவன் விழவெடுத்த நாளில்அவனுக்குச் சிறந்த நண்பரான நூற்றுவர்கன்ன ரென்பார் வராதிராராகலின் அவர் அப் பெயராற் குறிக்கப்படாவிடினும் அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/199&oldid=1590826" இலிருந்து மீள்விக்கப்பட்டது