உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

  • மறைமலையம் - 24

இனிச், சமுத்திரகுப்தன் காலத்தும் அவன் மகன் சந்திரகுப்தன் காலத்தும் மாளுவநாடு குடிமக்கள் பலர் ஒருங்குகூடி நடாத்திய குடியரசின் கீழிருந்தமை, அவரெடுத்துக் காட்டிய ஆங்கில ஆசிரியர் வரைந்த வரலாற்று நூலினாலேயே தெற்றெனப் புலனாதலின், இளங்கோவடிகள் குறித்த மாளுவவேந்தர் அக்குடியரசு நடாத்திய குடிமக்களாகாமை சிறிதறிவுடையார்க்கும் விளங்கற் பாலதேயாம். அற்றேல் இளங்கோவடிகள் குறித்த அம் மாளுவவேந்தர் தாம் யாரோவெனிற்; கனிஷ்க மன்னனைத் தலைவனாய்க் கொண்டு காந்தாரத்தில் அரசுபுரிந்த குஷான்குடிப் பேரரசர்க்குக் கீழடங்கி மாளுவநாட்டை ஆண்ட அரசர் ‘சகசத்திர பதிகளே’ ஆவர். இவர்களுட் சிறந்த அரசனாய்த் திகழ்ந்தவன் ‘முதலாம் ருத்ர தாமன்' என்பவனே யாவன்: இவன் கி.பி. 150ஆம் ஆண்டையடுத்துக் 'கிர்நார்' ஊர்க் கற்பாறையில் வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றால் இவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியி லிருந்தமை துணியப்படும். அவனுக்குப் பின்னும் அரசர் அறுவர் மாளுவ நாட்டின் தலைநகராகிய 'உச்சயிநி'யில் அரசு புரிந்தமையுங், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி யோடு, இச் சகசத்திரபதி யரசரின் மரபும் இவரோடு ஒரு காலத்தினராகிய ஆந்திர அரசரின் மரபும் அற்றுப் போனமையும் ஆங்கில ஆசிரியரான வின்செண்ட் சிமித் என்பவரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.4 மேலே 248, 249 ஆம் பக்கங்களிற் காட்டப்பட்டபடி கி.பி.171, முதல்193 வரையில் இலங்கையில் அரசாண்ட முதற் கயவாகு என்னும் வேந்தனும் சேரன்செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி விழாவுக்கு வந்திருந்ததனை, அவரோடு உடனிருந்த ஆசிரியர் இளங்கோவடிகளே சிலப்பதிகாரம், வரந்தரு காதை, 190 ஆம்

6

3

அடியில் விளங்கக் கூறுதலின், அவ் விருபத்திரண்டு

ஆண்டுகளில் மாளுவ நாட்டின்கண் அரசு புரிந்த 'ஜீவ தாமன் 'முதல் ருத்ரசிம்மன்', 'முதல் ருத்ரசேனன்', என்னுஞ் சகசத்திரபதி அரசர் மூவரில் எவனேனும் ஒருவனும், அக்காலத்தில் மாளுவத்தை யடுத்த மேல்நாடுகளுக்கு அரசரான ஆந்திரர் அச் சத்திரபதி யரசரோடு உறவு கலந்த பிற் றோன்றிய ஆந்திர மன்னனான ‘கௌதமீபுத்ர யஜ்ஞஸ்ரீ” என்னும் வேந்தனுமே அக் கண்ணகி விழவுக்கு வந்திருந்தா ராகற்பாலர். அவரையே இளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/201&oldid=1590828" இலிருந்து மீள்விக்கப்பட்டது