உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

193

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் கோவடிகள் அவர் தம் உறவுரிமை பற்றி 'மாளுவவேந்தர்' எனப் பலர்பாற் சொல்லாற் குறித்தாராகல் வேண்டும். இவ்வி வ்விரு மன்னர் வந்தமை பற்றியே இவரை இளங் கோவடிகள் இங்ஙனம் பலர்பாற் சொல்லாற் கிளந்திருக்க, இவ்வுண்மையினை நன்காய்ந்து பார்க்கும் ஆங்கில நூலறிவு மதுகை யின்றி, 'வேந்தர் என்னும் அச் சொல்லைக் கண்ட துணையான், அதற்கு 'நூற்றுவர் கன்னர்' எனப் பிழையகப் பொருள்செய்து, அப் பிழையையே தமது பொருந்தாக் கொள்கைக்கு ஒரு பெரும் பற்றுக்கோடாய்க் கொண்ட ‘செங்குட்டுவன்' நூலார் செயல், நீரில் அமிழ்ந்து வோன் மரக் கோடென நினைந்து ஒரு சிறுதுரும்பினைத் தாவிப்பற்றிய செயலோடு ஒப்பதாய் முடிந்தமை காண்க.

66

இனி, அவர் அவ் விருவேறு வேந்தரையும் ஒன்று படுத்தற்குக் காட்டிய நுண்ணறிவின் திறத்தை என்னென்பேம்! செங்குட்டுவனுக்குச் சிறந்த நண்பரான 'நூற்றுவர் கன்னர்’ அவ் வேந்தன் எடுப்பித்த கண்ணகி விழவுக்கு வராதிரார் ஆகலின், அதற்கு வந்திருந்தவராகச் சொல்லப்பட்ட மாளுவ வேந்தரே அந் நூற்றுவர்கன்ன ராதல் வேண்டுமென்னுஞ் ‘செங்குட்டுவன்’ நூலாரது உய்த்துணர்ச்சி எவ்வளவு நுண்ணிது! எவ்வளவு ஆழ்ந்தது! “வேற்றுமையின்றி நின்னொடு கலந்த, நூற்றுவர் கன்னர்' எனவும், “கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற" எனவும், ‘ஆரிய மன்னர் ஐயிருபதின்மரை எனவுஞ் சங்குட்டுவனுக்கு நட்பரசரான அவரைத் தாம் மொழிய வந்துழி யெல்லாங் ‘கன்னர்', 'நூற்றுவர்', 'ஐயிருபதின்மர் என்னும் பெயர்களால் ஐயுறுதற்கிடனின்றி விளங்கக் குறிப்பிட்டுவந்த ஆசிரியர் ளங்கோவடிகள், வோரிடத்துமட்டும் அவரை 'மாளுவவேந்தர்' என முன்பின் மொழிந்திலாத வேறொரு பெயராற் குறிப்பரோவெனவும், அவ்வாறு குறித்தற்கு ஏது வென்னை யெனவும், எத்துணைப் பெரியாருந் தாங் கருதியவற்றைத் தாங் கருதியவாறே செய்துமுடிக்க இயலாவாறு று மாறான நிகழ்ச்சிகள் வலிகொண்டு நிகழும் இஞ்ஞாலத்தில் 'நூற்றுவர் கன்னர் வராதிரார்' என நீர் அங்ஙனந் துணிந்துரைத்தற்குக் கொண்ட சான்று எப்பெற்றிய தெனவும் வினவுவார்க்குச் 'செங்குட்டுவன்

வ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/202&oldid=1590829" இலிருந்து மீள்விக்கப்பட்டது