உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் - 24

நூலார்’ தமது நுண்ணறிவு கொண்டு எங்ஙனம் இறுப்பரோ அஃதிறைவனே அறியற்பாலான்! யாம் ஆராய்ந்த மட்டில் இவரது நூலிலிருந்து இவ் வினாக்களுக்கு விடை ஒரு சிறிதும் பெறப்படாதென்பது திண்ணம். கங்கையாற்றின் வட கரைக்கண் அரசாண்ட நூற்றுவர் கன்னரை ஆசிரியர் வேறியாண்டும் மாளுவ வேந்தரென உரைப்பக் காணாமையானும், மாளுவ நாடென்பது கங்கையாற்றுக்குத் தெற்கே நெடுஞ் சேய்மைக்கண் உளதாகிய நருமதை யாற்றங் கரையை யடுத்துளதாகலின் அதன்கண் அஞ்ஞான்று அரசு வைகிய வேந்தர் வேறென்பதே வரலாற்று நூலாற் புலப்படுதலானும் அம் மாளுவவேந்தரே நூற்றுவர் கன்னராவரென்றல் சிறிதும் அடாதவுரையாம் என்பது.

அற்றேற் கண்ணகி விழவிற்கு வந்திருந்த அரசரில் நூற்றுவர் கன்னர் மொழியப்படாமை யென்னையெனிற், கூறுதும்: தென் றமிழ்நாட்டுச் சேரன் செங்குட்டுவ வேந்தற்கு உற்ற நண்பராயினார் வட ஆரியமன்னர் நுற்றுவர் கன்னர் மட்டுமே யென்பது மேலெடுத்துக்காட்டிய இளங்கோவடிகளின் காழுந்தமி ழுரைகளால் நன்கு விளங்காநிற்கும்; அவரை யொழிந்த ஏனை வட ஆரிய மன்னர் அவனைப் பகைத்திருந் தமையும், அதுபற்றியே அவன் அவர்மேற் படையெடுத்துச் சென்றமையுங் கூட அவ்வாசிரியர் மொழிகளாற் புலனாகின்றன. இங்ஙனமாகத் தென் றமிழ்நாட்டரசனான செங்குட்டுவற்கு நண்பராகித் தம் இனத்தவரான ஆரியமன்னரைப் பகைத்து நின்ற நூற்றுவர் கன்னர்க்கு வடநாட்டில் உள்ள அவ்ஆரிய மன்னரோடு எவ்வளவு போராட்டம் இருந்ததாகல் வேண்டும்! ம் நெடுஞ் சேய்மைக்கண் உளதாகிய தென்னாட்டிலிருந்து, தமது வடநாடு நோக்கிப் படை திரட்டி வந்த செங்குட்டுவ வேந்தற்கு அந் நூற்றுவர் கன்னர் எவ்வளவு உதவிகள் செய்து, தம் மிருவர்க்கும் மாற்றாரான அவ் ஆரிய மன்னரைப் போரில் வன்றிருத்தல் வேண்டும்! அவ்வாறு பேருதவிகள் செய்து பெரும்போர் நிகழ்த்தி வெற்றிகண்ட பேராண்மையில் எத்தனை ஆயிரம் படைஞரும் எத்தனை ஆயிரம் யானை குதிரைகளும் அவர் மடியக் கொடுத் திருத்தல் வேண்டும்! எத்தனை நூறாயிரம் பொருட்டிரள் அவர் இழந்தாராகல் வேண்டும்! இங்ஙனமெல்லாந் தம் படைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/203&oldid=1590830" இலிருந்து மீள்விக்கப்பட்டது