உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

195

பொருளையும், இழந்து தமது அரசியல் வலிகுறைந்த நிலையி லிருக்கையில், அதனைத் திரும்ப வலிபெறுத்தும் முயற்சியைக் கைவிட்டு, அடுத்து நிகழ்ந்த கண்ணகிவிழவுக்கு அந் நூற்றுவர் கன்னர் எங்ஙனம் வரக்கூடும்? அன்றி வந்திருப்பரேற் சீர்குலைந்த நிலையிலுள்ள அவர் தம் அரசியல் அவரில்லாத காலத்தில் வேறு மாற்றரசரால் எளிதிற் கைப்பற்றப் படுமன்றே? இவ்வியல்புகளை நன்குணர்ந்து பார்த்தே செங்குட்டுவன்

வெற்றி

வேந்தனாய்த் தனது தென்னாடு நோக்கித் திரும்புகின்றுழி, உற்ற நண்பரான அந் நூற்றுவர் கன்னரைத் தன்னோ டுடனழைத்துவராமல், அவரை அவர் தம் நாடு நோக்கிச் "செல்கவென்று ஏவி" அவ்வாற்றால் அவர் வலிகுறைந்த தமது அரசியலைப் பெயர்த்தும் வலிபெறுத்து தற்கு டஞ்செய்தான். ஆகவே, அந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவ வேந்தன் உடன்பாடு பெற்றே கண்ணகி விழாவுக்கு வாராராயினாரென்பது சிறிது கருத்தொருங்கி நோக்க வல்லார்க்கும் புலனாகற் பாலதேயாம். இவ்வுண்மையினை ஆராய்ந்து பார்க்கும் வன்மையின்றிச் சேரன்செங்குட்டுவன் நூலார் கண்ணகி விழாவுக்கு வந்திருந்தோரில் நூற்றுவர்கள்ளர் சொல்லப்படாமை ஒன்றே கண்டு அதற்கு வந்திருந்த மாளுவ வேந்தரை அந் நூற்றுவர் கன்னராகப் பிழைத்துணர்ந்தது சிறிதும் பொருந்துவ தில்லாப் போலியாராய்ச்சியாமென டுக்க. எனவே மாளுவ வேந்தரென ஆசிரியராற் குறித்தோதப் பட்டார். ‘நூற்றுவர் கன்னர்' அல்லரென்பதூஉஞ், சமுத்திர குப்தனும் அவன் மகன் சந்திரகுப்தனும் அரசுபுரிந்த கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாளுவநாடு குடியரசின் கீழிருந்ததே யன்றி வேந்தராட்சியின் கீழிருந்ததன் றென்பது வரலாற்று நூல்களால் நன்கறியக் கிடத்தலின் அஃது அரசாட்சி யிலிருந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் நடுவுக்கு முன்னரே யாமென்பதூஉம், அந் நூற்றாண்டின் நடுவுக்கு முற்சென்ற காலத்தில் மாளுவ நாட்டை அரசுபுரிந்த அரசர் வரிசையிற் கண்ணகிவிழவுக்கு வந்தவராகக் கொள்ளப் படுதற் குரியார், முதற் கயவாகுவென்னும் இலங்கைவேந்தன் காலத்தவரான சகசத்திர பதியரசர் மூவரில் ஒருவனும் அவற்குறவினனான 'கௌதமீபுத்ர யஜ்ஞஸ்ரீ' என்னும் ஆந்திர மன்னனுமேயாவ ரென்பதூஉம், அவரது காலங் கி.பி. 173 க்கும் 193 க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/204&oldid=1590831" இலிருந்து மீள்விக்கப்பட்டது