உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் 24

இடைப்பட்டதேயாகலின் அதன்கண் அழிந்துபட்ட

கடைச்சங்கங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுவுக்கு முற்பட்டதே யாகல் வேண்டு மென்பதூஉந் திண்ணமாய்ப் பெறப்படும். ஆதலால், இவ்வுண்மை முடிபுக்கு மாறாகச் ‘சேரன் செங்குட்டுவன்' நூலார் அதனைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின்கட் படுப்பிக்க விழைந்து போலியாராய்ச்சி பொருந்தா தொழிந்தமை காண்க.

சய்த

இனிச், 'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை என்னும் பெருந்தமிழ்ப் பாட்டுடைச் செய்யுட்கள் இயற்றப்பட் காலத்தை வகுத்தற்கும், அதன்வழியே அதற்குமுன் நிலவிய கடைச்சங்க காலத்தை வகுத்தற்கும் நுறுங்கா வைரவாள்போல் நின்று உதவிபுரிவதாகிய இலங்கை மன்னன் முதற்கய வாகுவின் காலங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிற் படுவ தாதலை வரலாற்று நூலாசிரியரெல்லாரும் ஒருப்பட்டுரைக்கக் காண்டலிற், கடைச்சங்க காலத்தைக் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்க விழைந்த தமது கருத்துக்கு அது முழுமாறாய் நின்று தமதாராய்ச்சியினை இருகூறாய்ப் போழ்ந்து அவ்வாராய்ச்சி உள்ளீடில்லா வெறும் புரையாய் இருத்தலைக் காட்டுத லுணர்ந்த ‘செங்குட்டுவன்' நூலார் அவ் வைரவாளினையும் நுறுக்கிவிடுதற்கு முயன்று, அம்முயற்சி கைகூடாவாறு அஃது அதனையும் ஈர்ந்து பாழ்படுத்த, அதனால் அவர் செயலற்றுக் கரைந்த கையறவுரைப் பெற்றியுஞ் சிறிது காட்டுதும்:

இலங்கையரசரின் வரலாறுகளை யுரைக்கும் பொருட்டுப் புத்த குருமார்களால் வரையப்பட்ட ‘மகாவம்சம்' என்னும் நூலின்கண், முதற்கயவாகு வேந்தன் சேரன் செங்குட்டுவன் காலத்திருந்தனன் என்பதனைக் காட்டுங்குறிப்பு ஏதுங் காணப்படவில்லையென்று 'செங்குட்டுவன்' நூலார் கூறினர். புத்த சமயத்தினனாகிய அம் மன்னவன் கண்ணகியென்னும் ஒரு கற்புடைமாதைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டானாயின், அதனைச் சொல்லுதலிற், புத்த குருமார்க்கு விருப்பு நிகழாமை இயற்கையேயாம். அவர் அது சொல்லாமையே பற்றிக் கயவாகுவேந்தன் செங்குட்டுவன் காலத்தினன் அல்லனென்றல் யாங்ஙனம் பொருந்தும்? செங்குட்டுவனால் எடுப்பிக்கப் பட்ட கண்ணகிவிழவுக்குக் கயவாகுவேந்தன் சென்றதையுந், திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/205&oldid=1590832" இலிருந்து மீள்விக்கப்பட்டது