உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

3

197

அவன் இலங்கைக்கு வந்தபோது கண்ணகி யணிந்திருந்த பொற் சிலம்பினைக் கொணர்ந்து தனது வெற்றியினை நினைவுகூர்தற் பொருட்டு ஆண்டுகடோறும் அவன் நடப்பித்த கொண்டாட்ட விழவில் அப் ‘பத்தினிதேவி'யின் வழிபாட்டைச் சிறந்தெடுத்து வைத்ததையும் இன்றுங்கூடச் சிங்களவர்கள் அறங்கூறும் மன்றில் அச் சிலம்பைத் தொட்டுச் சூளுரைப்பதையும் நன்கெடுத்துக் காட்டி, முதற் கயவாகு வேந்தன் சேரன் செங்குட்டுவன் காலத்தினனேயாவனென்று, திரு அருணாசலம் அவர்கள் தாம் பெரிதாராய்ந் தெழுதிய 'இலங்கை வரலாற்றின் முதற்குறிப்புகள்”5 என்னும் நூலில் இனிது விளக்கியிருக் கின்றார்கள். கயவாகு மன்னன் கண்ணகி வழிபாட்டினை இலங்கைக்குக் கொண்டு சென்ற வரலாறு 'மகாவம்சத்'திற் குறிக்கப்படாவிடினும், அம் மகாவம்சத்தைப் போலவே பழையனவாய் இலங்கை வரலாறுக ளுரைக்கும் ‘ராஜரத்நாகரி’, 'ராஜாவளி என்னும் நூல்களில் அது குறிக்கப்பட் டிருத்தலினாலன்றே அருணாசலம் அவர்கள் தாம் எழுதிய அந்நூலில் அக்குறிப்பினை நன்கெடுத்து விளக்குவாராயினர்கள். இவ்வாற்றால் முதற் கயவாகுவேந்தன் சேரன்செங்குட்டுவன் காலத்தினனே யாவனென்பது செங்குட்டுவனுங் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவரே யாவரென்பதும், ஆகவே செங்குட்டுவனைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்க முயன்ற ‘செங்குட்டுவன் நூலாரது முயற்சி ‘ஆடிக்காற்றி னிடைப் பட்ட பஞ்சுத்துய்” போற் பயன்படாது பறந்தோடிப் போயிற்றென்பதும் வைரத்தூணென நாட்டப் பட்டமை காண்க.

அதனால் அவனுஞ்

னித், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தவனான 'திதியன்' என்னுந் தமிழ்மன்னனையுங், கி.பி. 460 இல் இலங்கையை அரசாண்ட ‘ததியன்’ என்னுந் தமிழ்மன்னனையுஞ் செங்குட்டுவன்’ நூலார் ஒன்றுபடுத்துரைத்து, அதனைத் தமது கோட்பாட்டுக்கு ஒருபெருஞ் சான்றாகக் காட்டித் தமதாராய்ச்சியினை முடித்திட்டார். ‘ததியன்’ எனும் பெயர் வாய்ந்த மற்றொரு தமிழரசன் கி.மு. 90 இல் இலங்கையை ஆண்டவன் என்பது அருணாசலம் அவர்களால் தமது லங்கை வரலாற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/206&oldid=1590833" இலிருந்து மீள்விக்கப்பட்டது