உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

  • மறைமலையம் - 24

முதற்குறிப்புகள்' என்னும் நூலில் எடுத்துக்காட்டப்பட் டிருக்கின்றது.7 'செங்குட்டுவன்’ நூலார் தாமும் அதனையே யெடுத்துக் காட்டினார். ஆகவே 'ததியன்' எனப் பெயர்பூண்ட இலங்கைத் தமிழ் மன்னர் இருவரில் ஒருவன் கி.மு. 90 இலும், மற்றொருவன் அவற்கு ஐந்நூறாண்டு பிற்பட்டுக் கி.பி.490 இலும் க் இருந்தமை புலனாகாநிற்கும். மற்றுத், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோ கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தவனென்பதை மேலே 600 ஆம் பக்கத்தில் விளக்கிக் காட்டினாம். ஆதலால், அப்பாண்டியன் காலத்த வனாய்த் தமிழ்நாட்டிலிருந்த ‘திதியன்' என்னும் அரசனுக்கும், அவனுக்கு ஒரு நூற்றாண்டு முன்னும் நான்கு நூற்றாண்டுகள் பின்னும் இலங்கையிலிருந்து அரசாண்ட‘ததியன்' எனப் பெயர் பூண்ட அரசரிருவர்க்கும் ஏதொரு தொடர்புங் காண்கிலம். திதியனுக்குந் ததியனுக்கும் பெயரொற்றுமைதானும் இலது. வரலாற்று நூலில், வெறும் பெயரொற்றுமை யொன்றே கொண்டு ஒரு முடிபுசெய்தல் பொருந்தாதெனப் பல்காலுங் கரையாநிற்குஞ் 'செங்குட்டுவன்' நூலாரே அப்பெயரொற்றுமை தானும் இல்லாத 'திதியன்' 'ததியன்' என்னும் அரசர் இருவரையும் ஒருவரெனத் துணிந்துரைப்பது நகையாடுதற்கே ஏதுவாம். வெவ்வே றிடங்களிலும் வெவ்வேறு காலங்களிலும் இருந்த அவ்விருவரையும் ஒருவரெனக் கோடற்குப் பிற குறிப்புக்கள் தாமும் இலவாகவும், இயைத்து ஒன்றுபடுத்தற்கு இயலா அவ் விருவரையும் இயைத்து ஒன்றுபடுத்தப் புக்கது, மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிப்போடுவதோடு ஒப்பதாமன்றி மற்றென்னை? ங்ஙனமாகக், கி.பி.முதல் நூற்றாண்டில் தமிழ்நாட்டின்க ணிருந்த ‘திதியன்' என்னும் அரசற்குங், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்த 'ததியன் என்னும் அரசற்குந் தாடர்புகாட்டுதல்

எவ்வாற்றானும் இயலாதாகலின், தமது வெற்றெண்ணமே கருவியாய்க் கொண்டு கடைச்சங்க காலத்தைக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற் படுப்பிக்கப்புகுந்த 'செங்குட்டுவன்' நூலாரது முயற்சி, வானத்தின்கண் ஓவியம் வரையப் புகுந்தார் தம் முயற்சியோடொத்து வறிதானமை காண்க. என்றிதுகாறும் ஆராய்ந்து காட்டியவாற்றாற், கடைச் ச் சங்ககாலஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/207&oldid=1590835" இலிருந்து மீள்விக்கப்பட்டது