உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

26. திருத்தொண்டத்தொகையும் திருவாதவூரடிகளும்

இனித், திருத்தொண்டத்தொகையில் திருவாதவூரடிகள் குறிப்பிடப்படவில்லை யென்றும், அதன்கட் சொல்லப் பட்ட 'பொய்யடிமை யில்லாத புலவர்’ என்பார் கடைச் சங்கத்திலிருந்து தமிழாராய்ந்த ‘கபிலர்’, ‘பரணர்’, ‘நக்கீரர்’ முதலான புலவர் கூட்டத்தவராகிய தொகையடியாரே யாவரல்லால் தனியடியாராகிய திருவாதவூரடிகளாதல் சல்லாதென்றுந், திருவாதவூரர் தமது காலத்துக்கு முந்தியவரானாற் சுந்தரமூர்த்திகள் தாம் அருளிய அத் திருத்தொண்டத் தொகையில் அவரைச் சொல்லாது விடார் என்றும், ஆகவே சுந்தரமூர்த்திகள் இருந்த கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் திருவாதவூரடிகள் இருந்தாராகல் வேண்டுமென்றுந் 'தமிழ் வரலாறு' உடையார் கூறிய பகுதியினை ஆராய்வாம்: திருத்தொண்டத் தொகையிற் போந்த 'பொய்யடிமையில்லாத புலவரைத்’ தனி யடியாராகக் கொள்ளல் வேண்டுமென்பதற்கு இவர் காட்டிய சான்று என்னையெனிற்,

காள்ளாமல்

தாகையடியாராகக்

கூட்டம்ஒன் பானோ டறுபத்து மூன்று தனிப்பெயரா ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண்டு

என்று நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய ‘திருத் தொண்டர் திருவந்தாதிச்' செய்யுளில் 'தொகையடியார் ஒன்பதின்மர்' எனவுந், ‘தனியடியார் அறுபத்துமூவர் எனவுங் கூறியதேயாம். சுந்தரமூர்த்தி நாயனார் இருந்தபோது அவரோடு உடனிருந்து அவரது கருத்தை அவர்பாற் கேட்டறிந் தவராயின், அல்லது அவர் தம் மாணாக்கர் மரபில்வந்த ஒருவர்பால் அதனை உசாவி யறிந்தவராயின் நம்பியாண்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/209&oldid=1590837" இலிருந்து மீள்விக்கப்பட்டது