உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் - 24

கருவியாகும். 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்னுஞ் சொற்றொடர் நிற்குஞ் செய்யுளிற் சால்லப்பட்ட

'புகழ்ச்சோழர்' 'நரசிங்க முனையரையர்’, ‘அதிபத்தர்’, ‘கலிக்கம்பர்’, ‘கலியர்’, ‘சத்தியார்', 'ஐயடிகள் காடவர்கோன்' என்னும் ஏனை நாயன்மார் எழுவருந் தனியடியாரே யல்லால், தொகையடியாரல்லர்; தனியடியாரைச் சொல்லும் இச்செய்யுளியற் 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்பதொன்று பாய்யடிமையில்லாத மட்டுந் தொகையடியாரைச் சுட்டுமென்றல் ஆக்கியோன் கருத்துக்கு மாறாவதாம். மற்றுப், 'பரமனையே பாடுவார்' என்னுஞ் சொற்றொடர் நிற்குஞ் செய்யுளிற் போந்த ‘பத்தராய்ப் பணிவார்கள்’, சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்கள், 'திருவாரூர்ப் பிறந்தார்கள்', 'முப்போதுந் திருமேனி தீண்டுவார்’, ‘முழுநீறு பூசிய முனிவர்’, ‘அப்பாலும் அடிச் சார்ந்தார்’,என்னும் அடியார் அறுவருமே தொகையடியாரே யாதல் எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தொன்றாம். “தில்லைவா ழந்தணர்” என்னும் முதற்பாட் டொன்றிற் றவிரத், தனியடியாரைக் கூறும் ஏனை யொன்பது செய்யுட்களில் எங்குந் தொகையடியாரை இடைமடுத்து ஆசிரியன் உரைப்பக் காண்கிலம். தொகை யடியாரை ஒருங்கு தொகுத்துக் கூறும் “பத்தராய்ப் பணிவார்கள்” என்னும் ஒரே செய்யுளியல் வேறு தனியடியாரை இடைப்புகுந்து ஆசிரியன் மொழியவுங் காண்கிலம். ஆகவே, தனியடியாரைக் கூறும் பாட்டுக்களில் தொகையடியாரையுந், தொகையடியாரைக் கூறும் பாட்டில் தனியடியாரையும் மொழிதல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குக் கருத்தன்மை தெள்ளிதிற் புலனாகின்றதன்றோ? அற்றேல், “தில்லைவா ழந்தணர்” என்னும் முதற்பாட்டின் முதலில் தொகையடியாரும், அதன்பின் றனியடியாரும் மொழியப் படுதலென்னையெனிற் கூறுதும்: சிவபிரான் றிருவடிக்கண் மெய்யன்புடையராய் ஒழுகிய திருத்தொண்டரைப் பாடுதற்குச் சுந்தரமூர்த்திகள் விழைவுமீதூர்ந்து நின்றவழிச், சிவபிரானே, “தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று முதலடி எடுத்துக்கொடுத்துத் திருத்தொண்டத்தொகை பாடுமாறு அவர்க்குக் கட்டளையிட்டருளின ரென்பது,

99

தொல்லைமால் வரைபயந்த தூயாடன் றிருப்பாகன் அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/211&oldid=1590839" இலிருந்து மீள்விக்கப்பட்டது