உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

203

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்என் றெல்லையில்வண் புகழாரையெடுத்திசைப்பா மொழியென்றார்

எனவுந்,

தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத் தமிழ்மாலைச் செம்பொருளாற் றிருத்தொண்டத் தொகையான திருப்பதிகம் உம்பர்பிரான் றானருளும் உணர்வுபெற வுலகேத்த எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ ரெதிர்பணிந்தார்

(தடுத்தாட்கொண்ட புராணம். 199, 202)

எனவுஞ் சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த வாற்றால் நன்கறியப்படும். படவே, திருத்தொண்டத் தொகை முதற் செய்யுளின் முதலடிக்கண் உள்ள “தில்லைவா ழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்னுஞ் சொற்றொடர்

சுந்தரமூர்த்திகள் செய்த தன்றென்பது பெற்றாம். பெறவே, தனியடியாரைக் கூறும்அம் முதற் செய்யுளில் அது வந்தமைபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லையென விடுக்க.

தாகிய

நன்று சொன்னீர், மக்கள் அறிவினாற் செய்தற்கெளி ஒருபாட்டுக்கு இறைவனே முதலெடுத்துக் காடுத்தானென்றால் நம்பற்பாலதன்று; அக் கதையின் கருத்தென்னென்றாற், சுந்தரமூர்த்தி நாயனார் திருத் தொண்டத்தொகை பாடும் விழைவினராய் அதனை எவ்வாறு துவங்குவதென்று ஆராய்ந்து கொண்டு நிற்கையில், அவர்க்கு அருகே நின்றாரில் ஒருவர் தற்செயலாய்த் 'தில்லைவா ழந்தணர் என்று சொல்லக் கேட்டு அதனையே இறைவனெடுத்துக் கொடுத்ததாக உட்கொண்டு அதன் முதற்கண் நிறுத்துப் பாடினாராதல் வேண்டுமெனக் கோடலே அதன் கருத்தாவதாமெனின்; அங்ஙனங் கொள்வார் கொள்க; அவ்வாறே கொள்ளினுந் 'தில்லைவாழந்தணர்' எனத் தொகை யடியாரைக் குறிக்கும் அச்சொற்றொடர் சுந்தரமூர்த்திகள் அருளியதன்றென்பதே பெறப்படுமாகலின் அதுவும் எமது கொள்கையினையே வலியுறுத்துமென வுணர்க.

அற்றன்று, தேவாரப் பதிகங்களுள் எதனைப் பாடத் துவங்கினுந் தில்லைக்கண் உள்ள 'திருச்சிற்றம்பலம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/212&oldid=1590840" இலிருந்து மீள்விக்கப்பட்டது