உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் 24

என்பதனைச் சொல்லியே துவங்குதல் தொன்றுதொட்ட வழக்காய்ப் போதரக் காண்ட லின்,

னையெல்லாப் பதிகளினும் உள்ள அடியாரைச் சொல்லுதற்குமுன் தில்லையம்பதிக்கண் உள்ள தொகையடியாரையுந் தனியடியா ரொருவரையும் ஒருங்கெடுத்து மொழிதல் வேண்டுமென்னுங் கருத்துப் பற்றியே அப் பதிக்கண் இருந்த தில்லைவா ழந்தணராகிய தொகையடியாரையுந், திருநீலகண்ட நாயனாராகிய தனியடியாரையுஞ் சுந்தரமூர்த்திகள் ஒருங்கெடுத்து முதற்கண்வைத்து ஓதுவாராயின ரெனின்; அவ்வாறுரைப்பினுந், தனியடியாரைக் கூறுஞ் செய்யுளில் தாகையடியார் குழுவொன்றைக் கூறுமாறு தமது கருத்துக்கு முரணாய்நின்று தம்மை வலிந்தேவும் ஒரு சிறந்த ஏதுவின் வழிப்பட்டே சுந்தரமூர்த்திகள் அங்ஙனந் தில்லைவா ழந்தண’ராந் தொகையடியாரை அம் முதற் செய்யுளின் முதற்கண் வைத்து ஓதலாயினா ரென்பதே கொள்ளக் கிடக்குமாதலின், அதைப் போலவே 'பொய்யடிமை யில்லாத புலவ’ருந் தொகையடியாராயின் அவர் தம்மைத் தனியடியார் வரிசையினிடையே பகுத்துரைத்தற்கு அவர் தம்மை அவ்வாறு வலிந்தேவுஞ் சிறந்த பிறிதோர் ஏது வேண்டப்படுமன்றே; மற்று அதற்கு அங்ஙனஞ் சிறந்த பிறிதோரேது ஒருவாற்றானும் பெறப்படாமையின், தனியடியாரை மொழியும் ஏழாஞ் செய்யுளிற் போந்த 'பொய்யடிமை யில்லாத புலவர்”என்பாருந் தனியடியாரே யாவரல்லாற் றொகையடியா செல்லாதென்று கடைப்பிடிக்க.

ராதல்

அடியாரை

அதுவேயுமன்றித், தில்லைக்கணுள்ள முதற்கண் வைத்து ஓதுங் குறிப்பினராயே சுந்தரமூர்த்திகள் 'தில்லைவா ழந்தணரை” முதலாக வெடுத்துத் திருத்தொண்டத் தாகை அருளிச் செய்தாரெனக் கொள்வார்க்குந், தில்லைக்கண் உள்ள தனியடியாரான திருநீலகண் நாயனாரை முதற்கணுரையாது, தொகையடியாரான தில்லைவா ழந்தணரைப் பின்றொடருந் தனியடியார் வரிசையினின்றும் வேறு பிரித்து முதலெடுத்தது, திருநீலகண்ட நாயனார் தொடங்கி ஒன்பதாஞ்செய்யு ளிறுதி காறுந் தாம்பாடும் அடியார் அத்தனைபேருந் தனியடியாராகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/213&oldid=1590841" இலிருந்து மீள்விக்கப்பட்டது